தான்
கக
வாழ்வதாகக் கருதமாட்டான். கொலை
களவு கள் காமம் பொய் எல்லாப் பாவங்களும் அவனைச் சூழ்ந்து நிற்கும். இவ்வளவுக்குங் கார ணம் தன்னலங் கருதும் வாழ்வேயாகும்.
தன்னலங்கருதா வாழ்வை நடாத்த வேண்டு நடாத்தவேண்டு மென்பதே நம் முன்னோர்கள் நோக்கம். அதையே நம் முன்னோர்கள் வாழ்வில் வலியுறுத்தி வந் தார்கள். எந்த நூலை எந்தச் சாத்திரத்தை யெடுத் தாலும் அவைகளில் தன்னல மறுப்புப் பேசப் படுவது காணலாம். மனிதன் பண்டை நாளில் தன்னலமறுப்பைப் பற்றிய வித்தையையே பயின்று வந்தான். அது காலை அவன் பொருளா தார நூல்களைப்பயின்றானில்லை. பொருளாதார நூல் பயிற்சி தன்னலத்தை - தன் குடும்ப நலத்தை-தன் தேச நலத்தை வளர்ப்பதாகும். பொருளாதார நூல் பயின்றவர்க்குத் தேசபக்தி ததும்பி வழியலாம். அத்தேச பக்திக்குப் பொருள் யாது? பிறதேசங்களை வருத்துவது என் பதே. பிறதேசங்களை வருத்தி அவைகளிலுள்ள பொருள்களை வலிந்து திரட்டிவரும் தேசபக்தி போதிக்கப்படும் கலாசாலைகளில் ஞானவாணி வீற் றிருப்பளோ? பேயன்றோ அக்கலாசாலைகளில் வாழும்? நம் முன்னோர்கள் "அறஞ்செய விரும்பு' என்றன்றோ பிள்ளைகளுக்குப் போதி த்து வந்தார்கள்? நம்மவர்கள் கல்வி தன்னலங்
தி