கஉ
கருதாக் கல்வியென்பதைப்பற்றி ஈண்டு விரித் துரைக்க வேண்டுவதில்லை. தன்னலங் கருதாத பேரறத்தை ஊட்டுங் கல்வி இளமை உள்ளத்தில் பதிந்தால் முதுமை வாழ்வு மற்றவர்க்குரிய வாழ் வாக முடியும். கல்விக்குப் பின்னர் கட்டழகியோடு கலந்து அக்கல்வியின் பயனாகிய இறைவனோ டிசைந்த இன்ப வாழ்வைப்பெற முயலல்வேண்டும். "இறைகளோடிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வு என்று அருளிச்செய்த பெரியார் இல்லறத்தில் வாழ்ந்து பெண்ணின்பத்தைப் பேரின்பமாகக் கண்டவர். "பண்மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்றாய பெரு மானே மற்றாரை யுடையேன் " என்று ஓதியிருத் தல் காண்க.
தன்னலங் கருதி - கேவலம் மிருக சுகங் கருதி ஒரு பெண்ணை விவாகஞ் செய்கிறவன் இறை வனோ டிசைந்த இன்பம் நுகரமாட்டான். பெண்ணை இழிவாகக் கருதுகிறவன் அன்பை அறி யாதவன்; இன்பத்தை உணராதவன். உலகத் தோற்றத்துக்குக் காரணமாக உள்ள தெய்வமாகிய பெண்ணைப் பேயெனக் கருதுவதும் நாயென நினைப்பதும் இன்பத்துக்குக் கேடு சூழ்தலாகும். பெண்ணை - இல்லறத்தை - இயற்கை வாழ்வை ஆண்டவன் நெறியை - வெறுப்பதும் அறியாமை. நம்முன்னோர்கள் "கேவலம் மிருக இன்பங்கருதி