கங
எவன் பெண்ணை மணஞ் செய்கிறானோ அவன் நரகடைவான் என்று சொல்லியிருக்கிறார்கள். புத்திரப்பேறு கருதியே பெண்ணை மணஞ்செய் தல் வேண்டுமென்று நம் பெரியோர்கள் வலி யுறுத்திப் பேசியிருக்கிறார்கள். ஆன்மாதேகந் தாங்குவதற்கு முன்னர் எந்நிலையிலிருந்ததென் பது நமக்குத் தெரியாது. பலர் பலவாறு ஊகஞ் செய்துரைக்கலாம். ஆனால் ஆன்மாதேகந் தாங் கிய பிறகு அறிவு விளங்கிப் பற்பல ஆராய்ச்சி செய்து பல உண்மைகளைக்கண்டு இன்பத்தை நுகர்கிறது. அறிவு விளக்கத்துக்குக் கருவியாக உள்ள உடல் முளைக்கும் பூமி எது? நம்மை ஈன்ற அருமைத் தாயல்லவா? அவளையா பேய் என்று கூறுவது? நாயென்று பேசுவது? பெண்ணை வெறுக்கிறவன் உயிர்கள் சிருஷ்டியை வெறுக் கும் பாவியாவன். தான் தேகந்தாங்கி இன்ப நுகர்வதைப் போல ஏனையோர் தேகந்தாங்கி இன்ப நுகர எண்ணங்கொள்ளாத ஒருவனைப் யாவியென்றழைக்கலாம். பெண்ணோடுகூடி வாழும் அற நெறியில் பரோபகார சிந்தை வளர்வதை விரிக்கிற் பெருகும்..
சில ஞானிகள் பெண்களை மிக இழிவாகக் கூறி யிருப்பதென்னை என்று சிலர் வினவலாம். அதற்கு, உடலின்பமூட்டும் வேசைமார்களையே ஞானிகள் இழித்துக் கூறியுள்ளார்களென்று பதிலிறுத்தல்