கஎ
மும் விஷமாதல்போல இல்லற இன்பத்தையும் அளவாக நுகர்தல்வேண்டும். வரம்பு கடந்தால் பெருந்துன்பம் விளையும் என்பது நிச்சயம். விவா கத்துக்கு முன்னர்ச் சிலர் பலவித நோய் வாய்ப் பட்டு வருந்துகிறார். அன்னார் மனைவாழ்க்கை பெற்றதும் நோய் தீரப்பெறுகிறார். எனவே நோய்க்கு மருந்தாக உள்ள பெண்ணை வெறுப் பது தன்னுடலைத்தானே கொல்வதாக முடியும்.
ாழ்விற்குப் பெண் இன்றியமையாதவள் என்பதை விரித்துக்கொண்டு சென்றால் இக்கட் டுரை பெண்ணைப்பற்றியதாகவே முடியும். ஆத லால் பெண்ணை இவ்வளவோடு நிறுத்துவது
நலம்.
கல்வி பயிலுதற்கும், தன்னலமறுப்புக்கும் பெண்ணின்பம் நுகர்தற்குங் கருவியாயிருப்பது நமது அரிய உடல். உடல்காணியன்று ; பூமி யன்று; பொன்னன்று; பொருளன்று. அஃது ஆன்மாவிற்கு ஆண்டவனளித்த ஒரு பெரும் இருப்பு.எல்லாப் பொருள்களும் ஆன்மாவிற்கு விவகார நிலையில். வேறாக விளங்குகின்றன. உடலோ ஆன்மாவோடு நெருங்கிய உறவுகொண்டு உடன் உறைகிறது. அத்தகை உடலை நாம் எவ். வாறு ஓம்புதல்வேண்டும்? காணியை, பூமியை, பொன்னை, பொருளை நாம் எவ்வளவு பற்றுக் கொண்டு பாதுகாக்க முயல்கிறோம்? இவைகளி