கஅ
னும் கோடிபங்கு உயர்ந்த உடலிடத்தில் எவ் வளவு பற்றுக்கொண்டு அவ்வுடலை ஓம்பவேண்டு மென்பதைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ? உடல் இருந்தால் தான் மண் பொன் பெண் இன் பத்தை நன்கு நுகரலாம். உடல் மெலிவுற்றுத் தளர்ச்சியடைந்தால் இன்பமே நுகர இயலாது. இன்ப நுகர்விக்குங் கருவி உடலன்றோ? அவ் வுடலை ஓம்பாது விடலாமோ? உடலை நல்லவழியில் பாதுகாவாதவன் ஆண்டவன் அருளுக்கு உரிய வனாகான். இயற்கை யின்பத்தை நுகர்ந்து தன் னின்பத்தைப் பெறும் பொருட்டு ஆண்டவன் உயிர்க்கு உடல் நல்குகிறான். அவ்வுடலை ஓம் பாதுவிடின், இயற்கை யின்பமேது? இறை யின்பமேது? இன்ப வாழ்வேது? உயிர் உட லோடுகூடி இன்பத்தை நுகர்வது வாழ்வெனப் படும். வாழ்வு என்பதே உடலை ஒட்டி நிற் கிறது. உடலை வெறுப்பது வாழ்வை வெறுப்ப தாம். ஆகவே உடலை ஓம்புவது இன்பவாழ்வைப் பெறக் கால்கொள்வதாகும்.
உடலை ஓம்ப உறுதி கொள்வோர் வயித்தி யனை, மருந்தை விலக்கி வாழ்தல் வேண்டும். இயற்கை வழி வாழ்வை நடாத்துபவனுக்கு வயித் தியனும் வேண்டுவதில்லை ; மருந்தும் வேண்டுவ தில்லை. மனிதன் நீரிலும் காற்றிலும் சூரிய ஒளியிலும் நாடோறும் முறைப்படி மூழ்கிவருவா