உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பவாழ்வு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ககூ

னாயின், அவனை நோய் அணுகாது. இம்மூன்றை யும் ஒழுங்குபடப் பயன்படுத்திக்கொள்ளாது, பெரும் திண்டியால் உடல் உரம் பெறுமென்று வேளை நாழி கவனியாது, விரும்பியவற்றை உண் பவன் உடலில் நோய் ஆநந்த நடம்புரிந்து கொண்டே நிற்கும். 'அமித உணவின் விளைவு மரணம்' என்பது கவனிக்கத்தக்கது. சீரண சக் திக்கேற்றவாறு உணவுகொள்ளல் வேண்டும்.பசி யெடுக்கிறதோ எடுக்கவில்லையோ அதைக் தாது மணியைப் பார்த்து உணவு கொள்வோர் உடலை ஓம்புவோராகார். பசியெடுத்த பின் சீர ணிக்கக்கூடிய பொருளை உண்டு வாழ்வது நல்ல வாழ்வாகும். வைகறையெழுந்து நீரில் மூழ்கி இளஞ்சூரியனைக்காணாது உறங்குவோரது ஆயுள் குறைந்து விடும். விரதமிருப்பதாலும்

கரு

உடல் நலம்பெறும். விரதத்தால் உடலுக்கு விளையும் நலன்களைப் பக்கம் பக்கமாக வரையலாம். ஈண்டு விரிக்கிற் பெருகும். நமது நாட்டுப் பெரியோர் கள் ஏற்படுத்தியுள்ள விரதங்களை முறையாக அனுஷ்டித்தால் வச்சிரதேகமன்றோ உண்டாகும்! பன்றிகளைப் போலத் தின்பதால் மரண நோய் விரைவில் அடர்ந்து கொல்கிறது. உடலோம் புதல் இன்பவாழ்விற்கு இன்றி யமையாதது.

இயற்கை வழி வாழ்கிறவன் இறைவன் நியதி வழி வாழ்கிறவனாவன். இயற்கையை விடுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/20&oldid=1710632" இலிருந்து மீள்விக்கப்பட்டது