உஉ
இன்ப வாழ்வையளிக்கும் மனைவியை ஏன் துறந்து ஓடுதல்வேண்டும்? ஒவ்வொரு வீட்டிலும் உலவும் உயிர்களைக் கடவுளாகப் போற்றாது, வேறிடங்களில் கடவுள் இருக்கிறார் என்று ஓடுவது ஞானிகள் செயலாமோ? வீட்டிலுள்ள மனைவிமக்களை - தாய் தந்தையர்களை - பிறரை ஏன் மனிதராகப் பாவிக்கவேண்டும்? அவர்களை ஏன் தெய்வமாக வணங்குதலாகாது? வீட்டிலுள்ள மனைவிமக்களென்னும் ஒரு சில உயிர்களைத் தன் னலங்கருதாது, அவர்கட்கு வேண்டுவசெய்து, அவர்களை வழிபடுவது நாளடைவில் முதிர்ந்து, அது சுற்றத்தார் வழிபாடாய், கிராமத்தார் வழி பாடாய், தேசத்தார் வழிபாடாய், முடிவில் எல்லா உயிர்கள் வழிபாடாய் முடியும்.அவ் வழிபாடு செய்கிறவன் உலகத்தையே இறைவ னாக வழிபடுகிறவனாவான். அவன் மனமொழி மெய்- அவன் வாழ்வு - என்றும் இறைவனோ - டிசைந்து நிற்கும்.
இத்தகைவாழ்வை நடாத்தவே மனிதன் படைக்கப்பட்டான். அவ்வாழ்விற்கெனவே அவ னுக்குத் தனுகரணபுவன போகங்கள் வழங்கப் பட்டன. இந்நாளில் அந்நோக்கம் நிறைவேறு
கிறதா இந்நாளில் உலகத்தில் 'இறைகளோடி சைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்வு நலமென்னும் பேய்,
நடைபெறுகிறதா? சுய