உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பவாழ்வு.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உங

பேராசை என்னும் பைசாசம், உலகத்தை அலைத்துச் சாத்தானோடு வாழ்வைப் பிணித்து மக்களைக் கெடுத்து வருகின்றன. இவ்வழி யுழல்வோரால் உலக காரியங்கள் நடத்தப்படு கின்றன. அவர் செயலால் சாத்தான் கல்வி, பேய்மணம், பைசாச வாழ்வு, கொடிய ஆட்சி முறைகள் பெருகுகின்றன. உலகம் வருந்து கிறது; இயற்கை அலமருகிறது; வாழ்வு குலை கிறது; இன்பத்தைக் காணோம்; தருமம் தலை சாய்ந்து விட்டது; பரோபகாரம் படுத்துவிட்

டது. இந்நாளில் நாம் வாழ்கிறோம்.நமது வாழ்வு இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத் தோடிசைந்த வாழ்வாவது எப்பொழுது? அவ் வாழ்வை உயிர்ப்பிக்க எவ்வறிஞர் முயல்கிறார்? பட்டம் உத்தியோகம் முதலிய துன்பங்களை இன்பமாகக் கருதுவோர் கூட்டம் பெருகு நாளன்றோ இந்நாள்? இவ்வேளையில் எவர் அம் முயற்சியில் தலைப்படுவார்?

உலகம் சுய நலத்துக்கும் பேராசைக்கும் இரை யாகி வருந்தும் வேளைகளில் கடவுளருளால் மகான்கள், தோன்றுவது வழக்கம். இதுகாறும் மகான்கள் பலர் உலகத்தில் தோன்றினர். இந் நாளில் உலகத்தைச் சாந்தி செய்ய மகாத்மா காந்தி தோன்றியிருக்கிறார். அவர் உபதேசத் தால் உலகம் உய்யும் என்பதில் ஐயமில்லை. அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/24&oldid=1710636" இலிருந்து மீள்விக்கப்பட்டது