உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பவாழ்வு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




உசு

உபதேசத்தை உலகம் ஏற்றுக்கொண்டால் மனி தனை இப்பொழுது பிடித்தாட்டும் தற்கால நாக ரிகப் பேய் ஒழிந்து போகும். உலகத்திலுள்ள மனிதர்கள் தூய்மை பெறுவார்கள். அரசாங்கங் களுஞ் சுத்தப்படும்.

காந்தியடிகள் "இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோ டிசைந்த வாழ்வை 'க் கொள்ளு. மாறு போதிக்கிறார். அவர் உபதேசத்துக்கு மாறாக நிற்பது தற்கால நாகரிகம். தற்கால நாக ரிகம் மனிதன் வாழ்வை இயந்திர வாழ்வாக்கி யிருக்கிறது; தற்கால நாகரிகம் செல்வத்தை ஒரு கூட்டத்தாரிடத்தில் திரட்டிச் செலுத்துகிறது; தற்கால நாகரிகம் முதலாளி தொழிலாளி என்ற வகுப்பை உண்டுபண்ணி யிருக்கிறது. சுருங்கக் கூறின் தற்கால நாகரிகம் மனிதனுக்கும் கடவு ளுக்குமுள்ள தொடர்பை அறுத்திருக்கிறது என்று கூறலாம். அத்தொடர்பை மீண்டும் புணைக்க மகாத்மாகாந்தி தோன்றியிருக்கிறார். அவர் இவ்வுலகையே இன்பமயமாக்க முயன்று வருகிறார்.

உலகம் அவர் வழிநின்று "இறைகளோ டிசைந்த இன்பம் இன்பத்தோடிசைந்த வாழ்" வைப் பெறுமாறு ஆண்டியிவன் அருள் செய்

வானாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/25&oldid=1710637" இலிருந்து மீள்விக்கப்பட்டது