பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3.ஒருவழி உரை

கொடிகள்மறைத்த பெருங்கல், சிறுகல்
அடிமலைச் சாரல் கிழங்காய்ந் தருந்தும்
இனநிரைப் பன்றிகள் மேய்ச்சல் எருமைகள்!
முத்திழை நல்லார் விழிசுனைப் பூக்கள்!
களிறு வளைத்த இளந்தழை மூங்கிலோ
மீன்பிடிப் போரெறி தூண்டில்போல் தோன்றும்!
முழவுகள் தூக்கி முடிந்துவைத்த தைப்போல்
கிழப்பலாத் தொங்கும் பழமலைச் சாரல்
சிறுகுடி நல்லோர் குறுமகள் கண்டேன்!
எழிலோ வியமே எழுந்து நடந்தது!
சிந்திற்றுக் காற்சிலம்பு! சிந்திற் றிளநகை!
காந்தளம் மென்விரல் காந்தளைக் கொய்யப்
புதரின் இடையே புருப்புகு மாப்போல்
கொடியிடை நோகப் படர்ந்தது திங்கள்

முகமும் நுதலும் இருகையும் கண்ணும்
நடையும் மொழியும் அடடா! என் சொல்வேன்!
முகிலிடைத் தோன்றி ஒளிவிடும் திங்கள்
முகத்தாள்! பொருந்தாது மாசுண்டு திங்கட்கு
நெற்றி பிறையாம்! பிறைவளர்ந்து தேயும்!
இளமூங்கில் கைகள்! மலையா பிறப்பிடம்?
பூவிழி! இல்லை; சுனைவாழும் பூக்கள்!
மயிலியல்! அன்றன்று கார்கண்டே ஆடும்மயில்!