பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

33

இன்ப இலக்கியம்

இனக்கிளிகள் உன்குரலைக் கேட்டுத் திரும்பித் தினைக்கொல்லை என்றுன்னத் தேடி வருமென்ற மனக்கவலை யாலோ வாய் திறவா திருக்கின்றாய்?

பழமுண்ணும் கிள்ளைகள் முன்கான இணைகோவைப் பழமென்றே உன்னிதழைப் பார்த்து விரைந்து நுழையுமென் றஞ்சியோ வாய் திறவா திருக்கின்றாய்? மாங்குயில்கள் நாண மரக்காட்டில் பாட்டிசைத்துத் தீங்கனியைக் கோதவரும் சின்னஞ் சிறுகுயில்கள் ஈங்குவரு மென்ற நீ வாய் திறவா திருக்கின்றாய்?

முல்லை மலர்மொட்டு, தெங்கின்முளை, அரிசி, பல்லில்லை வாயில், மாதுளையின் வித்தென்று சொல்லுவா ரென்ருநீ வாய்திறவா திருக்கின்றாய்?

விழிச்சிரிப்பும், வெள்ளரித் தீம்பழத்துக் கன்னச் சுழிச்சிரிப்பும் கூட்டிவரும் வாய் திறந்தால் பூத்த கழிசிரிக்கும் என்றா கலங்கித் தவிக்கின்றாய்? வாய் திறந்தால் முல்லை மலர்ந்ததாய் வண்டினங்கள் ஆய்மலர் விட்டுன் இதழ்மலரை அண்டுமென்றா நோய்தீர் ஒருவார்த்தை சொல்லா திருக்கின்றாய்?

என்றேன்; களுக்கென் றிடைகுலுங்கக் கார்முல்லைக் காடு சிரித்தது போலச் சிரித்தாள்; நெகிழ்ந்தாள். சிறகடித்து வானப் பெருவெளியிற் போய்த்திரியும் மாடப்புறாவானோ மே!