பக்கம்:இன்ப இலக்கியம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11. பெருகும் பிரிவுத்துயர்!

 கைமலர் பொத்தி விழிமலர் கசக்கும் நெய்தற் கன்னியர் நீள்கடை திறக்க வைகறை எழுந்து மறிகடல் நிமிர்ந்து கைதையம் பெரும்பூக் காட்டை மலர்த்தி
அலேகடல் வந்த கதிரவன் மாலே உலேயிற் கொல்லர் உருக்கும் இரும்பென
மலேயிடை மறைந்து மக்களைப் பார்த்தே
‘உலகம் நாணின்றேல் உய்யுமோ?’ என்னும் தலேக்கணச் செருக்கன் போல் ஒளி அடக்கும்!
இலையடர் புன்னே நெடுங்கிளை இருந்தே
பேடை பிரிந்த நாரையை விளிக்கும்!
கூட்டைத் தேடிப் புட்கள் குறுகும்! கடன்பட் டேனும் மற்றவர்க் (கு) அளிக்க
உடன்பட் டேனெனத் திங்கள் உயரும்
செக்கச் சிவந்த இளஇருள் மாலை!

 பொருள் தேட முனைந்த புதுப்புனல் நாட்டில்
பெருமாட அணிசுவர்மேற் கிளிப்பிள்ளே தத்தை
வருமளவும் தொளேயிருந்து வந்துவந்து பார்க்கும்
தரங்கண்டு விரைந்தேனும் வருவாரோ தோழி?

 இல்லிருந்து பிரியாத எழில்மார்பன் அணைத்தோள் புல்லும் மகளிர்க்குப் பாலப் பொழிநிலவு
கொல்லும் தனித்தோரை என்ப துணர்ந்தேனும்
வல்லே நிலவின் வலிவடக்க வாராரோ?