102
இன்ப
கார்மேகம் மல்ல நாட்டு ஒற்றனாக இருந்து, ஓடிப்போய் விட்டானாம். மணிவண்ணன் அவன் தம்பி! திருமதியை மணக்க இருப்பவன்! துரோக சிந்தையுடனேயே இங்கு வந்திருக்கக்கூடுமோ? பண்பாற்றலை அவனிடம் பார்த்திருக்கிறேனே! இந்த இழிவினைச் செய்ய அவன் மனம் இடந்தந்திருக்குமா? இரகசியங்கள் மல்ல நாட்டுக்கே போய் விட்டிருக்குமோ? கார்மேகத்தின் கையில் கிடைத்திருக்கக் கூடுமோ...
கார்மேகத்தின் கையில் கிடைத்திருந்தால், திருமுடியார்?
நாசப் பொடியின் குறிப்புக்கள் மட்டுமே காணப்படவில்லை! அப்படியானால் தீப்பொருள்? மணிவண்ணன் மட்டுமே இதனைச் செய்திருப்பானா? வேறு யாரேனும் இதில் கலந்து கூட்டுச் சதி புரிந்திருப்பார்களோ? நான்கு நாட்களாக மாதவனைக் காணோம்! வேலைக்கு வரவில்லை என்றாள் திருமதி! மாதவனின் சதியாக இது இருக்கலாமோ? மாதவனும் மணிவண்ணனும் சேர்ந்து செய்திருப்பார்களோ?
திருமதி: (வந்துகொண்டே) அப்பா! திருமுடியாரை ஊர் மக்கள் கல்லால் அடித்துக் கொன்றுவிட்டார்களாம். பாவம்!
அறி: என்ன! திருமுடியாரைக் கொன்றுவிட்டார்களா? கல்லால் அடித்தா?பயங்கரமான படுகொலையைச் செய்துவிட்டார்கள். திருமதி! நாட்டு மக்கள் மிகவும் கெட்டுப் போய் விட்டார்களா? பழிவாங்கும் உணர்ச்சிக்கு மிகுதியும் இடம் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்! "இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயஞ் செய்து விடல்" என்ற குறளைக் கொண்டிருக்கும் நாட்டு மக்களின் நடத்தை