உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

103

எனக்குப் பிடிக்கவே இல்லை திருமதி. மகளே! என்னதான் ஒருவன் கேடு செய்தாலும், அவன் ஏன் அந்தக் கேட்டைச் செய்தான் என்று ஆராய்ந்து, கேட்டுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, குறையினைக் களையத்தான் முற்பட வேண்டும்! பதிலுக்குப் பதில் கேடு என்று ஒவ்வொருவரும் தொடங்கிவிட்டால் நாடே கொலைக்களமாகத்தான் காட்சி தரும்! இரத்த ஆறு பெருக்கெடுத்து ஓடிக் கொண்டேதான் இருக்கும்! குறள் தந்த கோமான், திருவள்ளுவப் பெருந்தகை நம்மைப் பார்த்து நகைப்பார்!

திரு: அப்பா! உங்கள் இலட்சியம் உயர்ந்ததுதான்! ஊரும் உலகமும் உங்களைப் போலிருந்தால் அல்லவா, இது நடைபெற முடியும்?

அறி: ஊர் மட்டுமல்ல, உலகம் முழுவதும் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்! பேராசை இது என்பாய் மகளே! இந்தப் பேராசை எனக்கு வேண்டும்! இன்னமும் வேண்டும்!

திரு: என்னமோ, அப்பா! "கொலையிற்கொடியாரை வேந்தொறுத்தல்" என்பதுகூட வள்ளுவர் வாய்மொழி தான்!

அறி: ஆமாம் திருமதி! நான் கொலை செய்பவர்களே இல்லாத ஒரு சாம்ராஜ்யத்தை உண்டாக்க விரும்புகிறேன்.

திரு: நீங்கள் வெற்றிபெற வேண்டும் அப்பா!

[கூறிவிட்டுப் போய்விடுகிறாள்.]

அறி: நான் வெற்றிபெறத்தான் வேண்டும்! யாரோ வீணர்கள், எந்தக் காரணத்துக்காகவோ எனக்குக் கேடு நினைத்திருக்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படி நினைக்க வேண்டும்? அதற்கான காரணமென்ன? அதைக் கண்டுபிடிக்க வேண்டும்! குறையைக் களையவேண்டும்? பாவம், அவர்கள்! இல்லாதவர்கள் அவர்கள்! நடைபெற்றிருக்கும் களவின் மூலம், பல்லாயிரக்கணக்கான மக்கள் துன்பக் கடலில் ஆழ்த்தப்படுவார்கள்! தேம்பித் திகைப்பார்கள்! நம் கண்டுபிடிப்புகள்