உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

107

விக்ர: போர் முறை அறியாதவர் போலப் பேசுகிறீரே! இரணத்தை உண்டாக்காமல் போரிட முடியுமா! வேலும் வில்லும், கோடரியும் குத்துவாளும் எதிரிகளுக்கு ஆலவட்டம் வீசவாப் பயன்படுகின்றன! இதுவரை சமர் புரிந்தோர், வீரர்களையும், அவர் தம் ஆயுதங்களையும் நம்பியிருந்தனர். நான் புதியதொரு முறையில் போர் புரியப்போகிறேன்! வீசுகின்ற காற்று என்னுடைய படை வரிசை! அதில் தூவிடும் இரணத்தை உண்டாக்கும் நாசப்பொடிகளோ, வாளாக, வேலாக, அம்பாக மாறி உடல்களைத் துளைத்துச் செல்லும்! மாற்றாரின் ஈட்டிக்கு மார்பு காட்டும் மாவீரன்கூட இரணப் பொடிக்குமுன் ஆற்றமாட்டாது தோற்றோடுவான்!

அறி: (மன்னரைப் பார்த்து) மன்னா! உடலை வாட்டும் நோய்களைப் போக்க, அவை தரும் வேதனைகளைக் குறைக்க, மருத்துவத் துறையில் ஈடுபட்டவன் நான்! இரணத்தை ஆற்றுவது, வாழ்வில் இன்பத்தைச் சேர்ப்பது என்னுடைய நோக்கமே யன்றி, புதிய இரணத்தை உண்டாக்குவது, வாழ்வைத் துன்ப மயமாக்குவதுமான கொடுஞ் செயலில் ஈடுபட என் மனம் ஒப்பாது! மருந்துகள் நோய்களைப் போக்க, மக்களுக்குத் துன்பத்தைத் தரவல்ல...

குமார: என்றாலும் போர் நிலைமை என்கிறபோது?

விக்ர: எதிரியின் படைவரிசைகள் எல்லையை மோதிக் கொண்டிருக்கிறது பெரியவரே! உம்மைக் கேட்டால் விரக்தி தரும் விவாதத்தில் ஈடுபடுகிறீர்; உதவிதர மறுக்கிறீர்! திருநாட்டுப் படைக்கு உமது உதவி தேவை! திருநாடு கேட்கிறது; மாவீரர்கள் கேட்கின்றனர்; மன்னரும் கேட்கிறார்; நானும் கேட்கின்றேன்—உதவி தாருமென்று! மொத்தத்தில் திருநாடே கேட்கிறது, நீர் மறுக்கிறீர். உமது இரணப் பொடி மட்டும் கிடைத்துவிட்டால். எவ்வளவு மகத்தான வெற்றிகளை திருநாடு குவித்துக் காட்டும் தெரியுமா? ஏன் முதியவரே! 'திருநாடு வெற்றி பெற்றது!' என்ற மகிழ்ச்சி செய்தி வருவது உமக்குப் பிடிக்கலில்லையா! திருநாட்டு வீரர்-