ஒளி
109
அறி: மன்னிக்க வேண்டும் மன்னா! மருத்துவக் கலையைப் போர்க் கலையாக்கும் முயற்சி, என் மனதை வாட்டுகிறது.
விக்: மன்னரின் கட்டளையை மறுப்பது எத்தகைய குற்றம் தெரியுமா?
அறி: மன்னன் இடும் கட்டளையை விட, என் மனச்சாட்சி இடும் கட்டளை கடுமையானது விக்ரமரே!
விக்ர: வெட்டிப் பேச்சு, வெறும் பேச்சு! ஆணவம் பிடித்து அலையும் வயோதிகரே! இதுவரை பொறுத்து வந்தேன்! நமது கட்டளையை மறுக்கிறீர்! இராஜத் துரோகம் விளைவிக்கிறீர்! விளைவு அறியாமல் பிதற்றுகிறீர்...
அறி: விக்கிரமரே! மருத்துவக் கலைக்கு துரோகமிழைக்க மறுக்கிறேன்! மனித குலத்துக்குத் துரோகமிழைக்க மறுக்கிறேன்!
விக்: அறிவானந்தரே! கடைசி முறையாகக் கேட்கிறேன்! படைக்கு உங்கள் உதவியை அளிப்பீரா, மாட்டீரா!
அறி: முடியாது, காவவரே! என் அறிவுத்திறன் அழிவுக்குத் துணை போகாது! அழிவுக்குத் துணைபோக அனுமதிக்கவும் மாட்டேன்!
விக்: அறிவானந்தரே! இறுதியாகக் கேட்கிறேன்! மன்னரை சான்று வைத்துக் கொண்டு கேட்கிறேன்! நீங்கள் நாசப்பொடியைத் தரமறுக்கும் காரணங்களைச் சொல்லுங்கள்!
அறி: பாதுகாவலரே! மன்னரையும், மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, நீங்கள் வகிக்கும் பதவி காரணமாக உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. இல்லையா? பொறுப்பினை ஏற்றுக் கொண்டு விட்டபின், அதனை நிறைவேற்றி வைப்பதற்காக எவ்வளவு பாடுபடுகிறீர்கள்? ஏன்...அது உங்கள் பொறுப்பு என்பதற்காகத்தானே! வேட்டுவத் தொழிலைப் பிழைப்பாய்க் கொண்டிருப்பவர்களிடம் போய்