122
இன்ப
வும் கூடாது. அப்பாவின் உதவியைக் கேட்கிறது அரசு ஆபத்தின் பேரால்! மறுக்கின்றபோது, நாட்டு நலனுக்கு எதிரானதாகிறது இலட்சியங்கள். நாட்டு மக்களின் ஆத்திரத்தையும் தூண்டிவிடுகிறது. இலட்சியத்தையும் மீறி எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள்! மக்களைக் குறைகூற முடியுமா?
மணி: கல்லடி உன்னை இப்படிப் பேச வைக்கிறது குணாளா!
திரு: உங்கள் சொல்லடியும் மிகக் கடுமையாக இருக்கிறது!
மணி: திருமதி ! உன் தந்தையின் இலட்சியங்களை நான் மதிக்கிறேன்; நீங்கள் மிதிக்கிறீர்கள்.
குணா: மணிவண்ணா! என் தந்தையின் இலட்சியங்களை என்றுமே நான் குறைத்து மதிப்பிட்டவன் அல்ல. மதிப்பிடவும் மாட்டேன். அந்த இலட்சியங்கள் என்னை மிகவும் கவர்ந்ததன் காரணமாகவே, படைப்பணியிலிருந்து விலகினேன்! அஞ்சா நெஞ்சன் என்று விருதளித்துச் சிறப்பித்தார்கள்! துணைத் தளபதி பதவி தருவதாகக் கூறினார்கள்; மறுத்துவிட்டேன். ஏன்? தந்தையின் இலட்சியங்களுக்காகவே! அந்த இலட்சியங்கள் மீது எனக்குப் பிடிப்பு ஏற்பட்டதனால்! இன்றைய நிலை என்ன? எல்லையிலே எதிரி இருக்கிறான். வலுவான படையுடன்! உள் நாட்டிலே பசி, பஞ்சம், பட்டினி! நாசப்பொடியில் கொஞ்சம் கொடுப்பதனால், நாட்டுக்கு வந்த ஆபத்தைத் தடுத்து விடும். வெற்றி கண்டபின் வளத்தையுண்டாக்கிக் கொள்ள முடியாதா?
மணி: மல்ல நாட்டு வீரர்களும் மனிதர்கள்தானே என்று என் ஆசான் எண்ணுகிறார்.
திரு: உயர்ந்த எண்ணம்தான், அந்த மனிதர்களால் நமக்கு ஊறு ஏற்படாத வரையில்!
மணி: எப்படியும் நாசப் பொடியை விக்ரமனுக்குத் தரக்கூடாது என்று நான் வாதாடிக் கொண்டுதானிருப்பேன்; அறிவானந்தர் மீது ஆணையிட்டுச் சொல்வேன்!