பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஒளி 13 திருமதி: அப்பா! அண்ணனுக்கு விருது தந்திருக்கிறார் களாம் ! நமது நாட்டைப் பற்றியும், நம் நாட்டு வீரர்களைப் பற்றியும் நாழ்வாகப் பேசிக் கொண்டிருந்தீர்களே அப்பா! இப்போது பார்த்தீர்களா, நமது நாட்டு வீரர்களின் அறி வாற்றலை! வெற்றி முரசு கொட்டிக்கொண்டு வருகின்றனர். எதிரிகளைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்துவிட்டு வருசின் றனர்.அப்பா! நம் அண்ணனுக்கு அஞ்சாநெஞ்சன் என்ற விருது வழங்கினாராம் மள்ளர் குமாரவேலர்! அறிவானந்தர்: மகிழ்ச்சி மகளே! மகிழ்ச்சி! போருக்கு அஞ்சும் நெஞ்சம் 'எனக்கு; போருக்கு அஞ்சா நெஞ்சம் உன் அண்ணனுக்கு! அதனால்தான் அவனுக்கு அஞ்சாநெஞ்சன் என்ற விருது! வேண்டியதுதானே மகளே. வீரனுக்குத் தரப் படும் விருது.. திருமதி: இல்லையப்பா! அண்ணனுக்கு விருது எதற் காகக் கொடுத்தார்களாம் தெரியுமா? களத்திலே எதிரி நாட்டவரைக் கண்டதுண்டமாக்கி, கையை வெட்டி, காலைத் துண்டித்து, கண்களைக் குருடாக்கி, குடலை எடுத்து மாலை தரித்துக் கொண்டதற்காக அல்லவாம்! வெண்ணாட்டு வேந்தனின் வீரவாளேைய பறித்து எடுத்துக் கொண்டு வந் தவர் அண்ணன்தானாம்? உக்கிரமான போராய்!யானையின் துதிக்கையையும், மன்னனின் கழுத்தையும் அண்ணனின் வாள், ஒரே வீச்சில் வீழ்த்தியதாம்! வேலப்பன் சொன்னா னாம் வில்வத்துக்கு! அவள் சொன்னாள் எனக்கு! அறிவா: அப்படியா மகளே! வீரன்தான் உன் அண் ணன். பெயர்தான் குணாளன்! பாவம் அந்தப் பெயரை, அவன் இயல்பு இப்படி ஆகும் என்று அறியாமல் சூட்டிவிட் டேன். திருமதி பார்த்தீர்களா அப்பா,மறுபடியும் உங்கள் பாதைக்கே நீங்கள் போகிறீர்களே... அறிவா: என் பாதை என்றுமே தனிப் பாதைதான் மகளே! என் பாதைதான் இந்த நாட்டுக்கு மனவளத்தைத் தரப் போகிறது. மண் வளத்தைத் தரப் போகிறது? மதி வளத்தைத் தரப் போகிறது. மகளே! குணாளனுக்கு அஞ்சா