பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

14 இன்ப நெஞ்சன் என்று விருது வழங்கியதின் மூலம் என்ன எதிர் பார்க்கிறது நாடு என்று தெரியுமா? அஞ்சாநெஞ்சன் அவன். யாருக்கு? எதிரிக்கு! போருக்கு! களத்துக்கு! ஆபத்துக்கு! இதைப் போல இன்னும் பலவும் சொல்லுவார்கள். இதற் துப் பொருள், நம்முடைய புலவர்களைக் கேட்டால் அந் தாதி யொன்றையே ஆக்கிக் கொடுத்து விடுவார்கள்! அஞ்சா நெஞ்சன்! என் மகன்! நான்? என் நெஞ்சம்? அஞ்சுகிறேன் அம்மா, அஞ்சுகிறேன். என்ன ஆகுமோ? என்ன ஆபத்து பெருகுமோ என்று அஞ்சுகிறேன். அவன் அஞ்சா நெஞ்சன்! கரத்திலே வீரம்! ஆமாம்; அப்படித்தான் பேசுகிறார்கள் போர் வீரர்கள்! நான், நான்... இந்தக் கலயம், இந்தப் பச் சிலை யென்று எதிரிகள் கரிமீதும், பரிமீதும் வருகின்றனராம்! நேருக்கு நேர் சந்திக்கிறார்கள் வீரர்கள்! நான் போரிடுவது எந்த எதிரியிடம்? அது ஒரு விந்தை திருமதி, ஒரு விந்தை! என் எதிரி, வெளிநாட்டில் இல்லை! எல்லைக்கு; அப்பாலே இல்லை; இதோ இங்கே, அங்கே! இந்த மண்ணுக்குச் சொந்தக்காரர் ககாகவே இருக்கிறார்கள்! நான் அந்த எதிரிகளைத் தேடித் தேடிச் செல்கிறேன். எத்தனையோ பேர், என்னிடமே கேட்கிறார்கள். என்ன சொல்வேன் அவர்களுக்கு? போர் வெறி கூடாது, அழிவு வேலையிலே ஈடுபடல் ஆகாது; தீயிடலும் வெட்டி வீழ்த்துதலும் கொடுஞ்செயல் என்கிறேன் (சிரிக்கிறார்கள்} போரிட்டுத்தானா பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்ளவேண் ரும்? அறிவின் துணைகொண்டு, அறவழியின் வழி நின்று. அன்புநெறி உடன்கொண்டு கருத்து வேற்றுமைகளைக் களைந்து கொள்ள முடியாதா என்றெல்லாம் கேட்கிறேன், எள்ளி நகையாடுகின்றனர்! எனக்குப் புரிகிறது. உரிமை யென்றும், கடமையென்றும் உரத்தக் குரலில் கனல் கக்க முழக்கிடுவோருக்கிடையே என் பேச்சு, ஏச்சுக்குத்தான் பயன்படும் என்பதுவும் தெரிகிறது. இன்னும் பலவும் எடுத் துச் செல்ல நினைக்கிறேன்! இந்நாட்டு மக்களின் இதயத்தை எண்ணி, என் இதயத்துக்குள்ளேயே பூட்டிக் கொள்கிறேன்.