146
இன்ப
மணி: (சிரித்துக் கொண்டே) குற்றவாளிகள் எந்த வடிவத்திலாவது தண்டிக்கப்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். நீதி தூங்கிப் போய் விட்டால், உலகம் ஒழிந்துபோக வேண்டியதுதானே!
அறி: மணிவண்ணா! திருடியவர்கள் யார் என்கிறாய் நீ?
மணி: மாதவன் திருடினானாம்! மாலதி அதற்குத் தூண்டினாளாம்!
குணா: என்ன, மாதவனா! என்ன?
அறி: பைத்யக்காரன்!
மணி: மாதவனுக்கும், மாலதிக்கும் அந்தத் திருட்டு காரணமாக மனவேறுபாடு ஏற்பட்டு, மாலதி, மாதவன் மீதே நாசப்பொடியைத் தூவி விட்டாளாம். பாவம்! அந்த ஆத்திரத்தில் அவன், அவளைக் கொலை செய்துவிட்டானாம்!
அறி: நம் நாசப்பொடி இருவரது சாவுக்குக் காரணமாயிருக்கிறது. மணிவண்ணா! மாதவனுக்கு மாற்றுப்பொடி போட்டாயா?
மணி: மன்னிக்கவேண்டும்! எவ்வளவோ முயன்றேன்; முடியவில்லை.
குணா: மணிவண்ணனுக்குத்தான் கோபம் வந்துவிட்டதே அப்பா. உடனே இங்கு வந்து மாற்றுப்பொடி எடுத்துக் கொண்டால் மதிப்புக் குறைந்து விடாதா?
திரு: பின்னென்ன! நீங்கள் போ என்றதும் போகவேண்டும். வா என்றதும் வரவேண்டுமோ?
அறி: சரி சரி...இதற்காக நீங்கள் இன்னொரு போரை ஆரம்பித்து விடாதீர்கள்
மணி: நான் அப்போது போகாமலிருந்திருந்தால் அந்த நாசப்பொடி, விக்ரமன் கையில் சேர்ந்திருக்கக் கூடும். தெரியுமா?
குணா: குறும்புக்காரன் நீ. மணிவண்ணா!