26
இன்ப
விக்ர: அப்படியா திருமுடியாரே! அறியேனே நான், இதுவரையில் ஐயன் அருள்பற்றியெல்லாம்! அறிய முயல்கிறேன்; சென்று வாருங்கள்...!
காட்சி—6
திருமதி: அப்பாவின் போக்கு எனக்குப் புரியாத புதிராகவே இருக்கிறது. வேளாவேளைக்குச் சோறுகூட தின்பதில்லை. அப்படி என்ன ஆராய்ச்சியோ?
குணா: திருமதி! எழுந்ததிலே இருந்து அப்பா தூங்குகிற வரைக்கும் அவர்கூடவே இருக்கிறாய். மலைச்சாரல், பாறைப்பகுதி, காட்டுப்பக்கம் அங்கே இங்கே என்று அலைந்து அலைந்து ஊரில் இருக்கிற வேர்களையும், பச்சிலைகளையும் கொண்டு வந்து ஆராய்ச்சி செய்கிறார் அப்பா! அவர் கவலை அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. அப்பாவின் ஆராய்ச்சிக்கு ஒரு முடிவேற்பட்டுவிட்டால், அந்தப் பொன்னாள் இந்த நாட்டின் நன்னாள்! போர் இருக்காது! போர் காரணமான புகைச்சல் இருக்காது! புரட்சி இருக்காது! வறட்சி இருக்காது! வறுமை இருக்காது! பசிப்பிணியே பாரைவிட்டு அகன்று போகும்.
குணா: பைத்தியமா உனக்கு? திருமதி! ஏன் சிரிக்கிறாய்?