ஒளி
27
திருமதி: அப்பா வெற்றியடைந்து விட்டால் அப்புறம் பசி, பஞ்சம், பட்டினி இருக்காது; சரி, ஒப்புக் கொள்கிறேன். போரும் புகைச்சலும் இருக்காது என்கிறாயே அண்ணா, நீ எங்கே போவாய் வேலைக்கு?
குணா: திருமதி! எனக்கு வேலை கிடைக்க வேண்டுமென்பதற்காக, அந்த வேலையின் மூலமாகப் பொருள் ஈட்ட வேண்டுமென்பதற்காகப் போர் ஏற்படும் நிலை நீடித்துக் கொண்டிருக்கவேண்டுமென்று நான் நினைத்தால், என்னைவிடக் கேடுகெட்ட ஒரு குடிமகன் இருக்க முடியாது. சுயநலத்துக்காக நாட்டில் குழப்பநிலை இருந்து கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுகின்ற இழிகுணம் நாட்டில் எந்த ஒருவருக்குமே இருக்கக்கூடாது திருமதி, இருக்கக் கூடாது! திருநாட்டைப் பொன் கொழிக்கும் பூமியாய் மாற்றி விடவேண்டும்; மக்கள் குறையற்றவர்கள், குணமிக்கவர்களாய் வாழவேண்டு மென்பதற்காகத்தான் அப்பா, அரும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்! அந்தப் பணியில் இனி நான் முழுமூச்சாக ஈடுபட முடிவெடுத்துவிட்டேன். ஆராய்ச்சியைத் துரிதப்படுத்த வேண்டும்.
திருமதி: தளபதி விக்ரமருக்கு அடுத்த பட்டாளப் பதவியைத் தங்களுக்குத்தான் தரப்போவதாகப் பேசிக் கொள்கிறார்களே அண்ணா!
குணா: உண்மைதான்! போரும் அதன் கொடுமைகளும் புவனத்தைவிட்டே போக்கப்பட வேண்டுமென்று ஒருநாளின் முழு நேரத்தையும் செலவிட்டுக் கொண்டு இருக்கிறார் அப்பா! திருமதி நான்... வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன்—பட்டாளத்தில் பதவி தேடிக் கொண்டிருப்பதற்காக!
திருமதி: அரண்மனைப் பதவியிலிருந்து வெளியேறிவிடப் போகிறீர்களா? அப்பா ஒப்புக் கொள்வார்களா?
குணா: மகிழ்ச்சியுடன் வரவேற்பார்! தந்தையின் கொள்கை வேறு, தனயனின் கொள்கை வேறு என்று இதுவரையில் இருந்து வந்த முரண்பாடுகள் மூலைக்குச் சென்று