இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
28
இன்ப
விடும். தந்தையும் தனயனும் நாட்டின் எதிர்காலத்துக்காக ஒருமித்த கருத்தோடு ஒன்றுபட்டார்கள். வென்றுவிட்டார்கள்! என்று எல்லோருமே இனி இயம்புவர்! வாழ்த்துவர்! வரவேற்பர்!
திரு: இந்த இனிய முடிவை, இப்போதே சென்று அப்பாவிடம் கூறி வருகிறேன்!
[போக முயல்கிறாள் திருமதி; குணாளன் அவளைத் தடுத்து—]
குணா: இரு அம்மா, இந்தச் சேதியை நானே அப்பாவிடம் கூற வேண்டும். திருமதி! மாதவன் எங்கே? மடையன் வெகு நேரமாகக் காணோம்!
திரு: ஏதோ மூலிகை வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார் அப்பா! ஒருவேளை தேடிக் கொண்டுபோய் இருப்பான்—காட்டுக்கு!
குணா: மாதவனாவது, காட்டுக்குப் போவதாவது...
திரு: மாதவன் போகும் காட்டில் புலியும் இல்லை; பாம்புப் புதரும் இல்லை. சிங்கமும் இல்லை; சிறுத்தையுமில்லை. மான் இருக்கும், மயில் இருக்கும்! பைங்கிளி இருக்கும்; பஞ்சவர்ணக்கிளி இருக்கும்!
[சிரித்துக்கொண்டே போய்விடுகிறாள்.]
குணா: பொல்லாத போக்கிரி நீ...!
[அவன் வேறு பக்கம் போகிறான்.]
காட்சி—7
[ஊரின் புறப்பகுதி. அறிவானந்தரது ஆராய்ச்சிக் கூடத்தில், ஆராய்ச்சிப் பிரிவில் வேலை பார்க்கும் ஒருவனான மாதவன் என்னும் இளைஞன் உல்லாசப் பிரியன். இளமை இன்பத்தை எப்படியும் துய்ப்பது என்பதை இலட்சியமாகக் கொண்டவன். மாலதி என்ற அலங்காரவல்லியுடன் அளவளாவிக் கொண்டிருக்கிறான்.]
[மாலதி, மாதவன்மேல் ஏதோ ஊடல் கொண்டவள்போல் காணப்படுகிறாள்.]