உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36

இன்ப

குமார: நிறுத்துங்கள் பாதுகாவலரே! நீண்ட நேரம் பேசிக் கொண்டே இருக்கிறீர்கள். அதனால்தான் அறிவானந்தர் பற்றி அப்படிக் கூறுகிறீர்கள்.

விக்ர: இல்லை மன்னா! ஆட்சிக்கு எதிராக என்றால் சதித்திட்டம் தீட்டியோ, மன்னருக்கெதிராக மக்களைத் தூண்டிவிட்டோ, எதிரி நாட்டாரிடம் கையூடுப் பெற்றுக் காட்டிக் கொடுக்கும் முறையிலோ அல்ல—போர் கூடாது என்று புலம்பிக் கொண்டிருக்கிறாராம். நாம் எல்லாம் போர் வெறியால் கூத்தாடிக் கொண்டிருக்கிறோமாம். ஏதோ ஆராய்ச்சி செய்கிறாராம்! ஆராய்ச்சியில் வெற்றி பெற்றால் ஏழைகள் வாழ்வு மட்டுமல்ல—அரசனின் வாழ்வும் உயரும் என்று பேசிக்கொண்டிருக்கிறாராம்!

குமார : நான்கூட கேள்விப்பட்டேன்! அறிவானந்தரின் ஆய்வுக்கூடம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறதாம். அபூர்வமான பல உண்மைகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றனவாம். தலையீடு தேவையில்லை. ஆலய விஷயம் சரியான நடவடிக்கைதான்! மல்ல நாட்டானுக்கு மண்டியிட தளபதி விக்ரமர் கோழையல்ல; குமாரவேலனின் குடிப்பெருமை குன்றிக் கிடக்கவில்லை என்பதை முறைப்படி உணர்த்திவிடுங்கள்! சரிதானே தளபதி!

விக்ர: மன்னர் உத்திரவும்!

[மண்டியிட்டு வணங்கிப் போகிறான்.]

காட்சி—12

[அறிவானந்தரின் ஆய்வுக்கூடத்தில் வெடிச்சத்தம் கேட்கிறது. திருமதியும் குணாளனும் பரபரப்புடன் ஓடிவந்து பார்க்கிறார்கள். குழாய் வெடித்துச்சிதறி அறிவானந்தரின் முகத்தில் கண்ணாடித் துண்டுகள் பட்டுக் கிடக்கிறார். குணாளனும் திருமதியும் கண்ணாடித் துண்டுகளை நீக்கி, அவரைத் தூக்கி வந்து ஒரு சாய்வு நாற்காலியில் போட்டு, உபசாரஞ் செய்கிறார்கள்.