உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

35

காட்சி—11

[மன்னன் குமாரவேலனின் தனியறை. அமர்ந்திருக்கும் மன்னனிடம் விக்ரமன்...]

விக்ர: ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. மல்ல நாட்டான் போர்த் தினவு கொண்டிருக்கிறானாம். நம் வீரத்தைப் பழித்துப் பேசிக் கொண்டிருக்கிறான் அந்த வீணன். திருநாட்டின் நிலையோ, போர்க் கருவிகள் புதுப்பிக்கப்படவும், புதிய கருவிகளைப் படைக்கவும், வீரர்களுக்குப் புதுமுறை பயிற்சி தரவும், புதிய வீரர்களைச் சேர்க்கவுமான படைப்பெருக்கத்துக்கான கருவூலத்தின் பெரும் பகுதியும் செலவிடப்பட்டிருக்கிறது. நாட்டு மக்களது வாழ்க்கைத்தரம், சற்றே குறைவுற்றுக் காணப்படுவது உண்மைதான்! வேறு வழியில்லை. அரசாங்க வருவாய்க்காகப் பல புது வரிகளையும் விதித்திருக்கிறேன். இனிமேலும் புதிய வரிகளின் பளுவினைச் சுமக்கும் சக்தியில் மக்கள் இல்லை என்பதையும் உணர்கிறேன். மன்னருக்கு மாற்றாரின் மதத்தில் தலையிடவேண்டும் என்ற நிலையில்லை; தேவையுமில்லை. நம் நாட்டுத் தேவாலயங்களின் வருவாய் ஆண்டுக்குப் பல லட்சம் இருக்குமாம்! நாடு போர் ஒன்றை நடத்தியாக வேண்டிய நிலையிலிருக்கும் போது ஆண்டவனின் பேரால் ஆயிரக்கணக்கான பொற்காசுகளைப் பாழாக்குவதை, நாகரிகமுள்ள ஒருநாடு, அனுமதிக்க முடியாது. அதற்காக அவசரச் சட்டம் பிறப்பித்திருக்கிறேன் தங்கள் பேரால்! இனி ஆலயங்களின் வருவாய் அனைத்தும் அரசாங்கத்துக்குச் சொந்தம். ஏழை எளிய மக்கள் வரி கட்டமுடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஆலய வருவாய் மூலம், வரி விலக்கு தரலாம் என்று நினைக்கிறேன். தங்கள் அனுமதி வேண்டும்! நம் படையில் சிறப்புச்சேவை செய்த வீரன் குணாளன் என்பவனுக்குத் தாங்கள் 'அஞ்சாநெஞ்சன்' என்ற விருது வழங்கியது நினைவிருக்கலாம். துணைத் தளபதிகளில் ஒருவனாக நியமிக்க நினைத்திருந்தேன்! பட்டாளப் பணியே தேவையில்லை என்று அறிவித்திருக்கிறான் இப்போது. அவன் தந்தை அறிவானந்தர் ஆட்சிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கேள்விப்பட்டேன்...