உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

இன்ப

ஏகரா சொத்து இருக்காம்! இவ்வளவையும் அவர் மட்டுமே அனுபவிக்கிறதா? அது தப்புன்னுதான் இப்ப, அரசாங்கமே அந்தச் சொத்துக்களையெல்லாம் எடுத்துக்கிட்டு, நமக்கு வரிகளைக் குறைக்கப் போகுதாம்!

மற்றொரு: என்னமோ, வரி குறைஞ்சா சரி; வாழ்வு ஒசந்தா சரி!

காட்சி—10

[திருமுடியார் மாளிகையில் தனியாக அமர்ந்திருக்கிறார். ஆழ்ந்த சிந்தனையைப் பிரதிபலிக்கும் தோற்றம். அவர் மனம் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறது.]

மனம்: நிலைகுலைத்துவிட்டான் நீச்சன். நிர்மூலமாக்கி விடவேண்டும்! கோயில் சொத்துக்கள் என்றால் கொள்ளையடித்துக் கொண்டு வரப்பட்டவையா என்ன? தேவனின் ஆறுகால பூசைக்கு ஆகும் செலவுக்குக்கூட, இருக்கின்ற சொத்துக்கள் போதியனவா, இல்லை. நேரில் எதிர்க்க ஆற்றல் அற்றுப்போனான் அந்த அறிவு கெட்டவன். சட்டத்தைத் துணைக்கழைத்துக் கொண்டான்! சமூகத்தையே எதிர்க்கத் துணிந்தான். நிலையில் இழிந்தார்க்கு நேர்வழி பயன் தராது. இருக்கவே இருக்கிறது குறுக்கு வழிகள். திருமுடியார்—யார் என்பதைக் காட்டுகிறேன். தீயதை விளைத்தவன், தீயவற்றையே அறுவடை செய்யட்டும்!

[ஆழ்ந்த யோசனையுடனேயே, திருமுடியார் எழுந்து போகிறார். விக்ரமனின் குரல் மட்டும் கேட்கிறது. திருமுடியார் நிற்கிறார்.]

குரல்: எச்சரிக்கிறேன்! முடிந்தால் உங்கள் தேவன் உங்களைக் காப்பாற்றட்டும்! தேவன் உங்களைக் காப்பாற்றட்டும்...!!

திரு: விக்கிரமா! தேவனையே அறைகூவலுக்கு அழைத்து விட்டாய்! அழைக்கப்பட்டவனின் அருள் உனக்கா? எனக்கா?பார்க்கிறேன்.