ஒளி
39
திருமதி: இதைப்போல் பல தடவை அவர் மூர்ச்சையாகி விழுந்திருக்கிறார்! மூர்ச்சை தெளிந்ததும், முன்னைவிட உற்சாகத்துடன் வேலைக்குப் போவார்!
குணா: பாவம், அவருக்கு உதவியாக யாரும் கிடையாது!
திரு: உதவிக்கு என்றுதான் மாதவன் இருக்கிறான்! ஆனால் உதவி வேண்டிய சமயத்தில் மட்டும் அவன் அருகில் இருக்கமாட்டான்.
[ஆய்வுச் சாலையில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒலிகள் கேட்டபடி இருக்கின்றன. தண்ணீர்க் கடிகாரத்தில் தண்ணீர்ச் சொட்டுகள் மெதுவாக விழுந்தபடி இருக்கின்றன. குணாளன் இந்தப் புட்டியை எடுத்து இந்த அளவு ஊற்றி, இந்தக் குறி வரும்வரைப் பார்த்து... என்று தன் கையால் காட்டியபடி, தனக்குத் தந்த வேலையை மறந்துவிடாமலிருக்க மனப்பாடம் செய்தபடி உட்கார்ந்திருக்கிறான்.
குழாயில் குமிழிகள் வரத்தொடங்கி சத்தம் அதிகமாகிறது. குணாளன் மிகப் பயத்துடன், புட்டியை எடுத்துத்தயாராக வைத்திருந்து, அறிவானந்தர் சொன்னபடி ஊற்றுகிறான். கொந்தளிப்பு அதிகமாகித் திடீரென்று அடங்கிவிடுகிறது. அறிவானந்தர் சொன்னதைப்போல பொங்கி வழியாமல், அது அடங்கி, கீழ் கட்டிகள் உண்டாகின்றன. குணாளன் திகைப்படைகிறான்.]
குணா: (உறக்கத்திலிருக்கும் அறிவானந்தரை எழுப்பி) அப்பா! நீங்கள் சொன்னடி செய்தேன். ஆனால் கொதித்து வழியாமல் அடங்கிவிட்டது!
அறிவா: (கண்ணைக் கசக்கிக் கொண்டு) என்ன, என்ன?