48
இன்ப
திருமதி: ஆசையைப் பாருங்களேன், ஆசையை! வேலைக்கு வந்து ஆறு மாசம்கூட ஆகலே! அப்பாவுக்குத் துணை வேணும்னா...
மணி: நான் உனக்குத் துணையா வந்துட்டேன்னு நினைக்கிறியா திருமதி! வரக்கூடாதா? அந்தப் பாக்கியம் எனக்குக் கிடையாதா?
திருமதி: அங்கேயே நில்லுங்க!
மணி : திருமதி! ஆராய்ச்சி செய்யும்போது ஆராய்ச்சிக் கருவிகளை விட்டு எட்டி நின்றால் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியாது. தெரியுமா? மிகுந்த முன் எச்சரிக்கை வேண்டும். ஆழ்ந்த சிந்தனை வேண்டும். துல்லியமான நினைவு தேவை. துவளாத மனம் இருக்கவேண்டும்...
திரு: ரொம்பவும் அனுபவம் போலிருக்கு!
மணி: அவசியப்படும்போது எடுக்கின்ற நடவடிக்கை தானே திருமதி, இன்னொரு சந்தர்ப்பத்துக்கு அனுபவமாகிவிடுகிறது!
திரு: இந்த ஆராய்ச்சி அனுபவத்தை அப்பாவிடம் வைத்துக் கொண்டால் அவருக்கும் உபயோகமாக இருக்கும்; உங்களுக்கும் பலன் கிடைக்கும்.
மணி: எந்தெந்த இடத்தில் எந்தெந்த ஆராய்ச்சி என்பதற்கு முறையில்லையா? திராவகம் இருக்கிறதே திருமதி, அதில் வெள்ளியையும் கரைக்கலாம், தங்கத்தையும் கரைக்கலாம்! வெள்ளியைக் கரைக்கும்போது ஒருவித பலன்; தங்கத்தைக் கரைக்கும்போது வேறொரு பலன். பயனும் அப்படித் தான்!
திரு: ஏதேது! அப்பாவுக்கு முன்னே, நீங்களே எல்லா ஆராய்ச்சியையும் முடிச்சிடுவிங்கபோலே இருக்கே!