உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54

இன்ப

கூட ஒரு முடிவேற்பட்டு விடும்! போகட்டும்; எங்கே இவ்வளவு தூரம் இந்தக் கிழவனைத் தேடிக்கொண்டு வந்தீர்கள்?

மற்: விக்ரம பூபதி, தங்களை உடனே அரண்மனைக்கு வந்துவிட்டுப் போகும்படிக் கூறச் சொன்னார்.

அறி: (சிரித்து) இதற்கா இத்தனை பேர்? வரவில்லையென்றால் கட்டித் தூக்கிச் செல்ல வந்திருக்கிறீர்களா?

[மறுபடி சிரிக்கிறார்.]

மற்: அப்படியெல்லாம் இல்லை ஐயா! விக்ரமரின் அன்புக் கட்டளை! அறிவிக்கும்படித்தான் கூறினார்.

அறி: போய்க்கொண்டே இருங்கள் பின்னால்; வந்து கொண்டே இருக்கிறேன்,

[வீரர்கள் போகிறார்கள். சில நிமிடங்கள் கழித்து அறிவானந்தரும் புறப்படுகிறார்.]

காட்சி—22

[திருநாட்டு அரண்மனையில் ஒரு பகுதி. என்றுமில்லாத மகிழ்ச்சிகரமான முறையில் பாதுகாவலன் விக்ரமன் அமர்ந்திருக்கிறான். அருகே அமைச்சர் அருளானந்தர் அமர்ந்திருக்கிறார். அங்கு வந்து சேருகிறார் அறிவானந்தர். அவரைக் கண்ட விக்ரமன் எதிர்கொண்டழைத்து...]

விக்ர: அறிவானந்தரே! உங்களுக்காகவே காத்திருக்கிறோம்! இத்தனை நாட்கள் உங்கள் பெருமையை உணராது போனோம்.

அறிவா: நான் மிகச் சாமான்யன்...

விக்ர: சாமான்யமானவரா? உங்களை அழைக்கப் படைத் தலைவரையே நான் அனுப்பியிருக்க வேண்டும்!..!

குணா: நாங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லையே.

[மெல்ல புன்னகை பூக்கிறார்.]

விக்ர: பெரியவரே! இப்படி உட்காருங்கள்.

[அறிவானந்தர் ஓர் ஆசனத்தில் அமர்கிறார். விக்ரமன் ஒரு கட்டாரியை எடுத்துக் கனியொன்றை அவனே நறுக்கி அவர்முன் கொண்டுவந்து வைத்து...]