உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

63

மணி: நான் இதுவரை கேட்கவில்லை; அதனால் அவர்கள் சொல்லவில்லை. அவ்வளவுதான்!

கார்: இல்லை; அவர்கள் மிக இரகசியமாக வைத்திருக்கிறார்கள்! நீ எவ்வளவுதான் நெருங்கிப் பழகினாலும் சொல்லமாட்டார்கள்! நீ வேண்டுமானால் கேட்டுப் பார். உனக்குத் தெரிந்துவிடுகிறதா என்று பார்ப்போம்!

மணி: ஏன், அண்ணா! அந்த இரகசியத்தைப் பற்றி அடிக்கடி நீங்கள் கேட்பதைப் பார்த்தால், எனக்குச் சந்தேகமாக இருக்கிறதே!

கார்: என்னடா சந்தேகம்?

மணி: அறிவானந்தரின் ஆராய்ச்சிக் கூடத்திலிருக்கும் இரகசியங்களைக் கண்டறிய திட்டம் ஏதோ இங்கு உருவாகிறது!

கார்: திடீரென்று உனக்கு ஏன் அந்த எண்ணம் பிறந்தது? திட்டமாவது, மட்டமாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை!

மணி: நானும் நெடுநாளாகக் கவனித்து வருகிறேன். நேற்று நீங்களும், மல்ல நாட்டுப் பிரபுவும் அறிவானந்தரின் ஆராய்ச்சி பற்றிப் பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் வந்ததும் திடீரென்று நிறுத்திவிட்டீர்கள்! இரவு நேரத்தில் நமது தோட்டத்தில் பலர் கூடிக் கூடிப் பேசுகிறீர்கள்! போகும் பொழுது முகத்தை மறைத்துக் கொண்டு செல்கிறார்கள். இருளில்கூட முகத்தை மறைத்துக் கொண்டு அவர்கள் ஏன் போகவேண்டும்? இங்கு என்ன சதித் திட்டம் உருவாகிறது? இன்றுகூட மல்ல நாட்டுப் பிரபு வந்து போகிறான்! ஊரை விட்டு, அரண்மனை அந்தஸ்தை விட்டு, திடீரென்று நீங்கள் ஏன் இங்கு வந்து மாளிகை வாங்க வேண்டும்? எனக்குப் புரியவில்லை! அறிவானந்தரின் இரகசியங்களைத் தெரிந்து, மல்ல நாட்டுக்கு அனுப்ப முயல்கிறீரா? அது நாட்டுத் துரோகம் ஆகும்!

கார்: எந்த நாட்டுக்குத் துரோகம்? மல்ல நாட்டுக்கு நான் சேவை செய்கிறேன்! அதே நேரத்தில், மல்ல நாட்டின் இரகசியங்களை அறிந்து வர, விக்ரமனின் ஆட்கள் அங்கு