62
இன்ப
மணி: அழகு அவளிடம் பிச்சை வாங்கணும்! நேரில் பார்த்தாதான் தெரியும்!
அம்: ஒரு நாளைக்கு அந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும்.
அம: எங்கு கிளம்பிவிட்டாய், மணிவண்ணா!
மணி: இப்பொழுதே போய் திருமதியை அழைத்துக் கொண்டு வருகிறேன். உங்களுக்கு எதற்கு மனக்குறை?
அம: இப்பொழுது வேண்டாம்! நாளைக் காலை பார்க்கலாம்! சாப்பிடவா! நீங்கள் குறையில்லாமல் வாழ்ந்தால் அதுவே எனக்குப் போதுமானது! (போகிறாள்)
கார்: தம்பி! மிகவும் அலுத்திருக்கிறாயே, ஆய்வுக் கூடத்தில் வேலை அதிகமோ?
மணி: அனலிலும் ஆவியிலும் நின்றல்லவா ஆராய வேண்டியிருக்கிறது!
கார்: அப்படியென்ன கடுமையான வேலை நீ செய்கிறாய்?
மணி: இரணத்தை உண்டாக்கும் பொடிக்கு மாற்று ஒன்று அறிவானந்தர் கண்டு பிடித்துள்ளார். அதைச் செம்மைப்படுத்தி வருகிறோம்!
கார்: ஆமாம், ஒரு பொடியைத் தூவினால் உடனே இரணம் உண்டாவது வேடிக்கைதான்! அந்தப் பொடியை எப்படிச் செய்கிறார்கள்?
மணி: எப்படிச் செய்கிறார்களென்று எனக்குத் தெரியாது!
கார்: உனக்குத் தெரியாதா? நீ மட்டும் அறிவானந்தரைக் கொண்டாடி வருகிறாயே யொழிய, அவர்கள் பல இரகசியங்களை உன்னிடம் சொல்லாமல் மறைத்து வருகிறார்கள்!