ஒளி
61
அமரா : உன் அண்ணனுக்கிருக்கிற சம்பத்துக்கு நீ வேலை பார்க்கவேணும்ங்கிற அவசியமேயில்லை.
மணி: வயிற்றுப் பிழைப்புக்காகவா நான் வேலை பார்க்கிறேன்? இல்லை. ஆராய்ச்சிக்காக! அறிவு வளர்ச்சிக்காக அங்கு வேலை.
அம: என்ன ஆராய்ச்சியோ! மணிவண்ணா! உன்னுடன் யாரார் வேலை பார்க்கிறது?
மணி: அறிவானந்தர், அவருடைய மகன் குணாளன், மாதவன், இன்னும் பலபேர்!
அம: அறிவானந்தரின் மகள்கூட அங்குதான் எப்போதும் இருப்பாளா?
மணி: (வேறு பக்கமாக) அவ்வளவு தூரம் தெரிந்துவிட்டதா? (தாயின் பக்கமாக) ஏனம்மா கேட்கிறே?
அம: அந்தப் பொண்ணு பேரென்னா!
மணி: (சற்றுக் கூச்சத்துடன்) போம்மா!
அம: ஒரு பொண்ணு பேரைச் சொல்ல இவ்வளவு கூச்சமா?
மணி: (கூச்சத்துடன்) திருமதி!
அம: அந்தப் பெண்கூட இப்படி நாணிக்கோண மாட்டாள் போலிருக்கே! பேரு நல்லதான் இருக்கு! பெண் எப்படிடா இருப்பாள்?
மணி: (உற்சாகத்துடன்) தங்க நிறம், தங்கக் குணம், தேனைப் பழிக்கும் மொழி, மானைப் பழிக்கும் விழி, நிலவைப் பழிக்கும் முகம், மயிலைப் பழிக்கும் நடை!
அம: மானே தேனேன்னு ஏதேதோ சொல்றியே! பெண் எப்படித்தான் இருப்பாள்?
மணி: அவளைப் பற்றி சொல்லி முடியாது!
அம: அந்த அளவு அழகா!