60
இன்ப
அமரா: நேரமாகிவிட்டது. மணிவண்ணன் இன்னும் காணோமே!
கார்: அவன் நேரம் போவது தெரியாமல், அறிவானந்தர் மாளிகையில் அடைபட்டுக்கிடப்பான்.
அமரா: ஒருவகையில் நல்லதுதானே! இதற்குமுன் படம், பாட்டு என்று வீண் பொழுது போக்கிய பையன். இப்பொழுது அடக்கவொடுக்கமாக இருக்கிறான்! அவனைப் பற்றி நல்ல பெயர்தான் வருகிறது! அந்தப் பெரியவர் அறிவானந்தர் அவனைத் திருத்திவிட்டார்! அவர் நல்லாயிருக்க வேண்டும்.
கார்: (சிரித்துக் கொண்டு) அறிவானந்தர் திருத்தவில்லை, அம்மா! அறிவானந்தருக்கு ஒருபெண் இருக்கிறாள்; அவளைப் பார்த்தபின்தான்...
அமரா: நீ சொல்றது வேடிக்கையாயிருக்கே! தப்புத் தண்டா எதுக்கும் போகமாட்டானே என் மகன்!
கார்: யார் தப்புன்னு சொன்னது? அவளை இவன் காதலிப்பதாகச் சொல்றான்.
அமரா: பொண்ணு நல்ல குணமா, சிவப்பா, அழகா இருப்பாளா?
கார்: வரப்போகிற மருமகளைப் பற்றி அதற்குள் அக்கறையா விசாரிக்க ஆரம்பித்துவிட்டாயே! எல்லாம் அதோ, உன் சின்ன மகனே வருகிறான். அவனையே கேட்டுத்தெரிந்து கொள்!
அமரா: ஏண்டா, மணி! பொழுதில் வராம இவ்வளவு நேரம் ஏன்? எடுத்து வைத்த சாப்பாடுகூட ஆறிவிட்டது! அறிவானந்தரின் மாளிகையில் அப்படியென்ன ஓயாத வேலை?
மணி: ஆராய்ச்சிக் கூடத்தில் வேலை அம்மா! அங்கிருப்பதை வந்து நீ பார்த்தால், ஆச்சரியப்படுவாய்!