உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

65

மணி: ஆபத்தில் நமது நாடு இருக்கிறதென்றால், திருநாட்டுப் படையால் மல்ல நாடு வீழ்த்தப்படுமென்பது உண்மையானால், படையில் சேர்ந்து நான் போராடுகிறேன்! அறிவானந்தரே எதிர்வந்தாலும், வாளைக் கீழே தணிக்காமல் கடைசி மூச்சுவரைக் காத்து நிற்பேன்! அது நேர்மை, வீரம்! நீங்கள் சொல்வது நயவஞ்சகம், நம்பிக்சைத் துரோகம்!

கார்: துரோகமல்ல, வஞ்சகமுமல்ல! நீ செய்வது தான் நாட்டுக்குத் துரோகம்! நிலையுணராமல் ஏதேதோ உளறுகிறாய்! நீ என்ன செய்வாய். எல்லாம் அந்த மாயக்காரி தந்த மயக்கம்!

மணி: திருமதியைப் பற்றித் தாழ்வாகப் பேச உங்களுக்கு ஏதும் உரிமை கிடையாது!

கார்: உன்னை ஆய்வுக்கூடத்தில் வைத்து, அவர்கள் வேலை வாங்கிக் கொள்கிறார்கள்! வேலைக்காரன் போல உழைக்கிறாய் அங்கே

மணி: உன்னைப்போல வியாபாரி வேடத்தில் சதி வேலைகள் செய்வதைவிட, ஆராய்ச்சிக்கூடத்தில் வேலைக்காரனாகப் பாடுபடுவது எவ்வளவோ மேல்!

[அமராவதி தாயார் வருகிறார்கள்]

அம: என்ன சண்டை அதற்குள்? உண்ண வாருங்கள்!

கார்: தின்றுவிட்டு, அறிவானந்தர் மாளிகையில்போய் அடப்பம் பிடித்துக் கொடு.

மணி: இனிமேல் இந்த வீட்டுச் சோறு—உன் வீட்டுச் சோறு எனக்கு வேண்டாம்! இதுவரை உல்லாசத்திற்காக—பொழுது போக்கிற்காக வேலை செய்தேன்! இனி உண்மையில் ஒரு வேலைக்காரனாக உழைப்பேன். சதிவேலை செய்தோ, உளவு வேலை பார்த்தோ, அடுத்துக்கெடுத்தோ ஒரு பிரபுப் பட்டத்தைப் பெறுவதைவிட, நம்பிக்கையுள்ள, நேர்மையான பணியாளாக இருப்பது மேல்! ஒருவனுடைய

பூ-160-இ-3