உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இன்ப

உயர்வு, பளபளப்பான உடையிலில்லை. மார்பில் தொங்கும் பதக்கங்களிவில்லை; உள்ளத்திலிருக்கும் உயரிய பண்பிலிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!

கார்: மயக்கம் என்று முதலில் சொன்னேன். அது தவறு! பைத்தியம் சரியாக முற்றிவிட்டது!

[மணிவண்ணன் வெளியேறுகிறான் வீட்டைவிட்டு]

அம: ஐயோ, இதென்ன விபரீதம்? மணிவண்ணா! நீ எங்கு போகிறாய்? இதோ, உணவு தயாராக இருக்கிறது!

மணி: (நின்று) எனக்கு இந்த மாளிகையில் இனி இடமில்லையம்மா!

அம: ஏன், ஏன்? கார்மேகம் ஏன் பேசாமலிருக்கிறாய்? உன் தம்பியை ஏன் விரட்டுகிறாய்?

கார்: தம்பி! நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகி! ஏனடா நிற்கிறாய்? விக்ரமனிடம் போய்ச் சொல், என் அண்ணன் ஒரு சதிகாரனென்று!

மணி: நான் ஒன்றும் காட்டிக் கொடுக்கப்போவதில்லை; நீ செய்யும் காரியங்களுக்குள்ள பலன் காணாமல் போகமாட்டாய்! நான் போகிறேன்!

அம: என்ன கூத்து இது கார்மேகம்! அவனைக் கூப்பிடு! தம்பி தவறு செய்தாலும் அண்ணன் பொறுத்துதான் போக வேண்டும்!

கார்: ஒன்றும் பயப்படாதே, அம்மா! அறிவானந்தர் மாளிகையில் இரண்டு நாள் சுற்றியிருந்துவிட்டு பின் தன்னாலே இங்கு ஓடிவருவான்!

அம்: ஐயோ!

[நிலை சோர்ந்து உட்காருகிறார்கள்.]

கார்: மணிவண்ணன் மறுத்துவிட்டான்! அறிவானந்தர் ஆராய்ச்சிக் கூடத்துக்குள் யாரார் நுழைபவர்கள்? (யோசித்து முகமலர்ச்சியுடன்) ஆம், மாதவன் இருக்கிறான். அவனைப் பிடிக்க மாலதியைப் பிடிக்க வேண்டும்! அந்த மாலதி...