இன்ப ஒளி
7
ஏற்படச் செய்த ஏந்தல் டாக்டர் பேரறிஞர் அண்ணா அவர்களே யாவார்.
விழலுக்கு இறைக்கப்பட்ட நீரை வயலுக்குத் திருப்பி, மக்கள் வாழ்வுக்கு முதல் ஜீவனாக விளங்கியவர்.
நாடக இலக்கணப்படி யுக்திகளை மேற்கொண்டு, காட்சிக்குக் காட்சி நாடகத்தில் மட்டுமல்ல, நாட்டிலும் நல்ல திருப்பம் ஏற்பட வைத்த நாயகர் அவர்.
மொழி நமக்கு விழி என்றால், அவ்விழிக்குள் இருக்கும் ஒளி நாடகம்!
மக்களை வழிநடத்திச் செல்லும் மகத்தான சாதனம் இது.
இந்தச் சாதனத்தின் மூலம் தமிழகத்தின் ஜாதகத்தை மாற்றி அமைத்தவர் அமரர் அண்ணா. அவர்கள் சிருஷ்டித்த ஓரங்க நாடகங்கள் ஓராயிரம்; முழுமை நாடகம் ஒவ்வொன்றும் விலையில்லா மாணிக்கம்; இருளை அகற்றும் கைவிளக்கு. வருங்காலச் சந்ததிகள் கட்டாயம் நெஞ்சில் நிறுத்த வேண்டிய இமாலயச் சிகரம்!
ஆம்!
நாட்டுக்கென்று அவர் படைத்த அத்தனை நாடகங்களையும், கதை, கட்டுரைகளையும் புத்தக வடிவில் கொண்டு வர—உங்கள் கரங்களில், கண்களில் தவழவிட எங்களுக்கு