உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72

இன்ப

மால: அதுக்கு மட்டும் குறைச்சலில்லை. கேட்டதும் கொண்டுவந்து கொட்டிக் குவித்து விடுவது மாதிரிதான்!

மாத: மாலதி, நான் ஆண் பிள்ளை! மீசை இருக்கு, முறுக்கா?

மால: தெரியுமே எனக்கு, நீங்க ஆண் பிள்ளைங்கிறது! எனக்குத் தெரியாதா? திறமை எவ்வளவுங்கிறதும் எனக்குத் தெரியுமே!

மாத: தெரியுமா! தெரிஞ்சுமா இப்படிச் சொன்னே?

மால: இதோ பாருங்க, நான் எவ்வளவோ உங்ககிட்டே கேட்டிருக்கேன்! கொடுத்து என் மனசைக் குளிரவச்சது ரொம்பவும் குறைச்சல்! கிடைக்காததைக் கேட்டா கொடுக்க முடியுமான்னு கேட்டிருக்கிங்க! ஒப்புக் கொண்டிருக்கேன்.

மாத: இப்ப என்ன வேணும் உனக்கு?

மால: உங்களாலே கொடுக்க முடிந்ததைத்தான் கேட்கப்போறேன்! முடியும்னு தெரிஞ்சுதான் கேட்கிறேன்.

மாத: சீக்கிரமா கேட்டுவிடேன்!

மாலா: (அவன் கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டபடி) கொடுக்கிறேன்னு சத்தியம் செய்து கொடுங்க முதலில்!

மாத: என்ன கேட்கப் போறேன்னு தெரியாம சத்தியம் கித்தியமன்னா எப்படி மாலதி! சத்தியம் பண்ணிப்புட்டா, அப்புறம் அதுப்படி நடந்துக்கணுமே!

மால: விக்ரமரோடெ உயிரைக் கொடுங்கன்னா கேட்டுடப் போறேன். இல்லே, திருநாட்டுக்கு மகாராணியாக்கி எனக்குப் பட்டஞ் சூட்டிவையுங்கோன்னு கேக்கப் போறேனா? உங்களாலே முடியும்; மனசு வச்சா முடியும்னு தெரிஞ்சுதான் கேட்கிறேன்; சத்தியம் செய்யுங்களேன்!

மாத: என்மேலே இல்லாத நம்பிக்கை நான் செய்யிற சத்தியத்துமேலே இருக்கா! சரி, சத்தியமா தர்றேன்! சொல்லு!