உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

இன்ப

மால: அதான் முடியாது! முதல்லே நான் கேட்டது வரணும்! நான் வேணும்னா, இப்பவே வரணும்! போங்க, போய் முதல்லே, கேட்டதைக் கொண்டாங்க. சீக்கிரமா கொண்டாங்க! உடனே திரும்பி வாங்க! காத்திருக்க வச்சி, அழும்படியா ஆக்கிடாதிங்க.

காட்சி—27

[மிக நீண்ட சோதனைக்கூடம். கொதிப்பதும், புகைவதும், எரிவதும், அரைப்பதும், கொல்லன், துருத்தியால் ஊதுவதும், தண்ணீர் விழக் கழுவுவதும், வடிப்பதும், பல வேலைகள் நடைபெறுகின்றன. உதவியாளர்களாக பலர் இருக்கின்றனர். உயர்தர உடையில் அறிவானந்தர் நின்று, ஒரு ஆராய்ச்சிக் கருவியைப் பொருத்திக் கொண்டிருக்கிறார்.]
[குமாரவேலன் வருகிறான்]

குமார: தாத்தா! இன்றைக்கு ஏதாவது ஒரு வேடிக்கை காட்டுங்கள்!

அறி: இயற்கை மறைத்து வைத்துள்ள வேடிக்கை வினோதங்கள் கோடி கோடி! அதனில் எதைக் காட்டுவது? நீரில் நெருப்பு வரச்செய்கிறேன். பார்க்கிறாயா?

குமார: எப்படித் தாத்தா! நீர் நெருப்பை அணைத்து விடாதா?

அறி: இதோ பார்! இந்தக் கட்டி எப்படி இருக்கிறது?

குமார: கரித்துண்டு மாதிரி இருக்கிறது!

அறி: தண்ணீரில் போட்டதும், மிகுந்த கொந்தளிப்புடன் அது எரியும்!

[தண்ணீரில் அதைப் போடுகிறார். அது எரிகிறது. குமாரவேலன் அதை ஆச்சரியத்துடன் பார்க்கிறான். பின் தண்ணீர் விழுந்து சுழலும் சக்கரத்தைப் பார்க்கிறான்; அதைப் பார்த்தபடி இருக்கிறான். விக்ரமனும் ஒரு புரோகிதரும் வருகிறார்கள்.]