உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்ப ஒளி, அண்ணாதுரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஒளி

87

காட்சி—31.

[அரண்மனையில் ஆத்திரத்துடன் உலவிக் கொண்டிருக்கிறான் விக்ரமன். மல்ல நாட்டுப்படை வந்து கொண்டிருப்பது அறிந்து, ஒற்றன் ஒருவன் ஓடிவருகிறான்.]

ஒற்றன்: பிரபு! கார்மேகம் இன்று காலை ஊரை விட்டே ஓடிப் போய்விட்டார்.

விக்ர: எதிர்பார்த்தேன்! சரி, நீ போ!

[அவன் போனதும் தனக்குள்]

சந்தேகித்தது சரியாகிவிட்டது! கார்மேகம் மல்ல நாட்டின் உளவாளியாக இருக்க வேண்டும் என்று அனுமானித்தது, இத்தனை சீக்கிரம் உண்மையாகும் என்று நினைக்கவில்லை. முத்து வணிகன்-அயல் நாட்டான் என்றபோதே எச்சரிக்கை எடுத்திருக்க வேண்டும்! என்னென்ன இரகசியங்களுடன் போயிருக்கிறான் என்றே தெரியவில்லை! அறிவானந்தர் ஒருவரால்தான் இந்த நெருக்கடியிலிருந்து திருநாடு காப்பாற்றப்பட முடியும். பார்க்கலாம்!

காட்சி—32

[அறிவானந்தர், ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சியில் ஆழ்ந்து கிடக்கிறார். துணைக் கருவிகளும் துணைப் பொருள்களும் அங்குமிங்குமாகக் குவிக்கப்பட்டு அலங்கோலத்துடனிருக்கின்றன. நீர்க் கடிகாரம் மட்டுமே அங்கு அமைதியைக் குலைத்துக் கொண்டிருக்கிறது. கவலை கப்பிய முகத்துடன், விக்ரமன் அங்கு வந்து அமைதிச் சூழலையொட்டி, தானும் அமைதியாக, அங்குள்ளவைகளைப் பற்றிக் கண்ணோட்டம் விடுகிறான். மனம் மட்டும், நிலைமைகளை அசை போட்டுக் கொண்டிருக்கிறது]