88
இன்ப
விக்ரமன் மனம்: புறஉலகை மறந்து புதைந்து கிடக்கிறார் ஆராய்ச்சியில். இதன் வெற்றியின் மீதுதான் இவருக்கு எவ்வளவு நம்பிக்கை! ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்துவிட்டால், என்ன அற்புதத்தை நிகழ்த்திவிட முடியும் என்று நம்புகிறார். விஞ்ஞான அறிவின் வெற்றி, நாட்டில் வளஞ்சரக்க எந்த வகையில் பயன்பட முடியும்? போர் கூடாது என்கிற இவர், போர், பகை, பசி காரணமாக மனிதன் சாகக் கூடாது என்பதற்காக முயற்சி மேற்கொள்வதாகக் கூறுகிறார். நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. இரணப்பொடியைச் சோதித்துக் காட்டினார். துளிபட்டால்கூட ஆறாத ரணம் உண்டாகிவிடுகிறது; அதற்கு ஒரு மாற்று மருந்தாம்! இரணம் ஆறிப் போகிறதாம்! இவரது ஆராய்ச்சி உண்டாக்கிய அழிவை, இவர்தம் ஆராய்ச்சி தான் போக்க முடியும் என்றாகிறதே! நீரிலிருந்து நெருப்பை அழைப்பேன் என்கிறார் இவரும்! திருமுடியாரும் கூடத்தான் இந்த வித்தையைச் செய்யமுடியும் என்று ஊரைக் கூட்டி உரைத்திருக்கிறார். வேளை குறித்தும் விட்டிருக்கிறார். திருமுடியார் ஆண்டவன் அருள் என்கிறார்; அறிவானந்தர் அதனையே அறிவின் திறன் என்கிறார். ஆண்டவனுக்கும் அறிவுக்குமே இங்கே போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! இருளும், ஒளியும் மோதத் தொடங்கி இருக்கின்றன. திருமுடியார் வெற்றிபெற்றுவிட்டால்...வெற்றி பெற்றுவிட்டால்...வெற்றி பெற்று...
விக்: அறிவானந்தரே...அறிவானந்தரே...