90
இன்ப
செய்துவிட முடியுமாம்! செப்பித் திரிந்தார் இப்படியெல்லாம்! இப்போது செய்து காட்டவே போகிறாராம்! அறிவானந்தரை, இங்கே ஆண்டவனின் அருள் அல்லவா வெற்றி கொள்ளப் போகிறது! பசியையும், பட்டினியையும். அந்த அருள்கொண்டு பறந்தோடச் செய்ய முடியும் என்கிறார்; ஆனால் திருநாடு தேவநாடாய் ஆவதற்குக் காணிக்கை தரவேண்டுமாம் மக்கள், தங்கள் தூய "பக்தி"யை! ஆண்டவனின் மீது அன்பு செலுத்த வேண்டுமாம்!
அறி: ஆண்டவன் மீது அன்பு செலுத்துவது என்பது மக்கள் ஒருவர் மீதொருவர், ஆண்டவனின் பேரால், அன்பு செலுத்திக் கொள்வதேயாகும். அந்த முறையில் தவறில்லை.
விக்: காணிக்கை வேண்டுமாமே, காணிக்கை! கடவுளரின் காலடியிலேயே வீழ்ந்து கிடக்க வேண்டுமாமே!
அறி: வயிறு இருக்கிறதே வயிறு என்று வாடிக் கொண்டிருக்கும் மக்களிடம், வயிறு நிரம்பும் வழி இதுதான் என்று எவர், எதைச் சொன்னாலும் நம்பித்தானே தீர வேண்டும்! நம்புகிறார்கள் மக்கள்!
விக்: நம்பிக்கையுடன் நின்றுவிட்டால் சரி; தீங்கொன்றுமில்லை. ஆண்டவனின் அருள் கொண்டுதான் ஆபத்துக்களைக் கடக்க முடியும் என்று, பிரச்சாரத்திலும் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள்! சிற்சில அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்ட முன் வருகிறார்கள். அறிவானந்தரே! நீங்களும் கூறுகிறீர்கள். நினைத்த இடத்தில் நெருப்பினை உண்டாக்கிக் காட்ட முடியும் என்று! அறிவின் ஆராய்ச்சி என்கிறீர்கள் அதற்கு! திருமுடியாரும் கூறுகிறாராம் அக்னிக் குழம்பை, ஆண்டவன் அருளால் ஆக்கிக் காட்டுவதாக! எனக்கு வேறுபாடு விளங்கவில்லையே!
அறி: உண்மையாகவா விக்ரமரே! உழைப்பு உழைப்பு என்று ஆராய்ச்சியிலேயே உழன்று கொண்டிருப்பதால் உலக நடப்பு பற்றியே உணர முடியாமல் போய்விடுகிறது! திருமுடியாரின் அறிவிப்பு உண்மையானால், திருவருளின் பெருமை பெருமைதான்!
விக்: அறிவித்திருப்பது உண்மைதான் அறிவானந்தரே!