இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
98
இன்ப
அறி: அருகே சென்று அல்ல, இங்கே நின்று! மந்திரோச் சாடனங்களை முழங்குங்கள்! வேண்டுகோள் விடுத்துக் கேளுங்கள்!
[என்றதும் மக்களுக்கிடையே பரபரப்புண்டாகிறது. சிலர் 'ஆண்டவனைச் சோதிக்கக் கூடாது' என்று குரல் கொடுக்கிறார்கள்! 'கடவுளைச் சோதிப்பவன் கர்மவான்" என்று சிலர் கத்துகிறார்கள். இன்னும் சிலர் "தீயை வரச் செய்யுங்கள் மறுபடியும்" என்று உரக்கக் கூவுகின்றனர். விக்ரமன் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரித்துவிட்டு அறிவானந்தரின் அருகில் வந்து நின்று கொள்கிறான். நிலைமை நெருக்கடியாகிவிட்டதை உணர்கிறார் திருமுடியார். நின்ற இடத்திலிருந்தே மந்திரங்களை முழங்கத் தொடங்குகிறார். இடையிடையே, தேவே! என்கிறார். திருவே! என்கிறார். உடல் அதிகமாக நடுங்கத் தொடங்குகிறது...தீ வரவில்லை; விழிக்கத் தொடங்குகிறார்.]
அறி: (மக்களைப் பார்த்து) மகேஸ்வரனின் அருள் திருமுடியாருக்கு ஒரே ஒரு முறைதான் சித்தித்தது போலும்! பெருங்குடி மக்களே! மெய்யறிவின் குல தெய்வங்களே! இந்த வரசித்தி விநாயகர் அல்ல—பல்லாண்டு காலம் பட்டபாடு, எனக்கு, நான் எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த இடத்திலிருந்தும், எந்தப் பொருளிலிருந்தும், தீயை வரவழைக்க முடியும் என்ற நிலையைத் தந்திருக்கிறது. பாருங்கள், அந்த வேடிக்கையை!
[என்று தம் கைப்பெட்டியிலிருந்து கரித்துண்டு ஒன்றை எடுத்து துதிக்கையில் வைத்துத் தேய்க்கிறார். அதிலிருந்து மீண்டும் நெருப்பு வருகிறது. அதைச் சுட்டிக்காட்டி]
துதிக்கையிலிருந்து மட்டுமல்ல-இந்தத் தூணிலிருந்தும் கூட-