பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AAMMiMMSAASAASAASAASAASAASAASAASAAASJJJJJSMSMMMSS S S S S S S S S S S

р இன்ப மலே

காதல் கித்தியமானது; துயது. அவ்வாறே காதல் செய்யும் காதலனும் காதலியும் கித்தியமானவர்கள்; தூயவர்கள். லட்சியக் காதலர்களாகிய அவர்களே உலகில் நாம் கண்டு பழகிய மக்களாக கினேக்கக்கூடாது. அழுக்கும் தவறும் கிறைந்த உலகத்துப் புழுகியிலே நடமாடும் மக்களே நினைத்து அந்தக் காதலர்களே கினேத்தால் அவர்களுடைய தூய்மை கெட்டுவிடும். காதல் என்ற தெய்விக உணர்ச்சியையே காதலனென்றும் காதலியென்றும் உருவாக்கி அமைக்கும் போது அவர்களுக்கு எந்தப் பெயரை வைப்பது? ஒரு காலத்தில் ஓரிடத்தில் இருப்பவர்களானல் இன்னுர் என்று சுட்டிக் கூறலாம். ஆதலினுல் காதல் செய்யும் காதலர் களேப் பெயர்கூறிச் சுட்டுவது தவறு என்று வரையறை செய்தனர் தமிழர் உருவும் பெயரும் உடைய்வராகி வாழும் மக்களைக் காதலராக வைத்துப் பாடுவது காதலின் நுட்பத்தையும் தூய்மையையும் குலேத்துவிடும் என்பது அவர் கொள்கை. ஆகவே அகப்பொருட் பாட்டில் சுட்டிப் பெயர் கூறும் பாத்திரங்கள் வருவதே இல்லை. அப்படிப் பெயர் கூறி அவர்களைக் காதலராகவோ காதலியராகவோ வைத்தால் அந்தப் பாடல்கள் அகத்தினேப் பாடல்கள் ஆகா; புறத்தினேப் பாடல்கள் ஆகிவிடும். கடவுளிடம் காதல் கொள்வதாக வைத்துப் பாடினுலும் அப்பாடல் புறத்துறைப் பாடலே ஆகும். தூய காதல் நிலவும் எல்ல்ேக்குள் பெயர் சுட்டும் விவகாரமே இல்லை. இதுவும் தமிழுக்கே சிறப்பாக அமைந்த இலக்கணம்.

தாம் இயற்றிய அகத்துறைப் பாடல்களில் யார் புகழை யேனும் இணக்க வேண்டுமானல் அதற்குத் தமிழ்ப் புலவர் கள் ஒரு வழி வைத்திருக்கிருர்கள். பாட்டில் வரும் அகத் துறை நிகழ்ச்சியில் அந்த மனிதரை ஒரு பாத்திரமாக்காமல் எப்படியாவது ஒரு தொடர்பை உண்டாக்கிப் பாட்டில் அவர் பெயரை நுழைத்துவிடுவார்கள்.

8