பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை

காதலைப் பற்றிய காட்சிகள் உலகத்து மொழிகளிலுள்ள கவிதைகளில் இருக்கின்றன. ஆல்ை தமிழில் உள்ள இரண்டு சிறப்புக்கள் அந்தக் களவுக் காதற் கவிகளில் இருப்பதில்லை. ஒன்று: வரையறையாகச் சில இலக்கண வரம்புடன் காதல் நிகழ்ச்சியைக் கூறுவது தமிழ் மரபு. திணே, துறை முதலிய ஒழுங்குகள் தமிழர் காதலில் உண்டு. அந்த ஒழுங்குகள் மற்ற மொழி யிலக்கியங்களில் இல்லை.

இரண்டாவது: தமிழர்கள் காதலே மிகமிகத் தூயகாக வைத்துப் போற்றினர். அதனே லட்சிய வாழ்வாகக் கொண் டனர். இத்தகைய உயர்ந்த நெறியில் அமையும் காதல், உல கத்தில் கிகழக்கட்டுமா என்ற ஐயங்கட்டச் சிலருக்கு ஏற்படுவ துண்டு.அதல்ை இதை, இல்லது, இனியது, கல்லோரால் காட் .டப்படுவது என்று இறையனர் அகப்பொருள் உரைகாார் கூறுவர். தொல்காப்பியர், இந்த வரையறை அவ்வளவும் உண்மை அல்ல; இந்த கிகழ்ச்சிகள் அத்தனையும் பொய்யும் அல்ல' என்று கினேக்கும்படியாக இலக்கணம் கூறுகிறர். புனேந்துரை வகையில்ை அழகான அமைப்புக்களே யெல் லாம் ஒன்று சேர்க்துச் சொல்வதை நாடக வழக்கு என்பார் கள். அகப்பொருள் நிகழ்ச்சிகள் நாடக வழக்கும் உலகியல் வழக்கும் இ2ணந்த ஒன்று என்று தொல்காப்பியர் சொல் கிருர், அதனேக் கொண்டு ஆராய்ந்தால், உலகியலில் நிகழும் நிகழ்ச்சிகளையும் லட்சிய வாழ்வுக்குரிய நிகழ்ச்சி களையும் இணைத்துக் கவிஞர் அகப்பொருள் உலகத்தைப் படைத்தனர் என்று தோன்றுகிறது. கனவும் கனவும் இணேந்தது அது.

- .." . . o

இந்த வரையறையோடு தமிழ்க் கவிஞர் சொல்வது நடத்தற்கு அரியது போலச் சில இடங்களில் தோன்றும். ஆயினும் காதலின் தூய்மையையும் சிறப்பையும் அத்தகைய நிகழ்ச்சிகளின் வாயிலாகவே கவிஞர்கள் புலப்படுத்தினர்.

7.