பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AJJSeeAMMASJSAMSASASJSJSJSAASAASAASAASAASAASAAASJAJSSSJSJSS

இன்ப 1 ఓు

AAA AASAAASAAA AAAA SAAAAAMMAMSMSAASAASAASAASAASAASAASAASAA AAAS SJSAASAASAA S SSSSS

பிறகு அவனைப் புலவர் பாராட்டுவதற்குச் சொல்ல வேண்டுமா? வண்டுகள் மொய்க்கும் கண்ணியையும், வீரக்கழலேயும் உடையவன்; அச்சத்தைத் தரும் குதிரை வீரர்களாகிய மழவரோடு பொருது அவரை ஒட்டியவன்; முருகனேப் போலப் போர் செய்கிறவன் ; இத்தகைய சிறப்புகளே உடையவன் ஆவி ; அவனுக்குரியது பொகினி மல்ை; அந்தப் பொதினி மலையிலே சாணேக்காரன் ஒட்டிய சாணக் கல்லைப் போலப் பிரியமாட்டோம் என்று அழகாக இணேத்து ஆவியின் புகழைப் பாடி விடுகிரு.ர். இரண்டு கல்லும் ஒட்டி இணேத்தது போல, காதலனும் காதலியும் பிரிவின்றி.இணேங்தது போல, பாட்டில் ஆவியின் புகழ் இணைந்து விளங்குகிறது. பாட்டின் ஆரம்பமே ஆவியின் புகழைச் சொல்லும் வகையில் அமைந்திருக் கிறது.

வண்டுபட்த் ததைந்த கண்ணி, ஒண்கழல், உருவக் குதிரை மழவர் ஒட்டிய முருகன் நற்போர், நெடுவேள் ஆவி அறுகோட்டு யானைப் பொதினி ஆங்கண் சிறுகா ரோடன் பயிளுெடு சேர்த்திய கற்போற் பிரியலம் *

என்ற தலைவன் கூற்றிலே வரும் உவமையில் ஆவியின் புகழும் வருகிறது.

ததைந்த - மலர்ந்த. கண்ணி - தலையில் அணியும் அடையாள மாலை. கஜல் வீர கண்டை. உருவம்-அச்சம். மழவர் . மழவரை. முருகின் நற்போர் . முருகனேப் போலச் செய்யும் நல்ல போரையுடைய. நெடுவேள் - உயர்ந்த சிற்றரசன். அறுகோட்டு யானே - முறிந்த கொம்பையுடைய யானே. காரோடன் - சாணேயிடுபவன். பயின் சிென். பிரியலம் - பிரியமாட்டோம்.

10