பக்கம்:இன்ப மலை (சங்கநூற் காட்சிகள்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

AASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAAASA SSASAS SSAS SSAS

இன்ப மலே

ASA SSASAS SJSJSS SSAS SSAS SSAS SSAS SASJSAASAASAASAASAASAASAASAASAA

யாக இராமல் அதை உள்ளே வைத்துச் சொல் வதால் உள்ளுறை உவமம் என்ற பெயர் வந்தது. உள்ளுறை-உள்ளே மறைந்திருப்பது. இந்தப் பாட்டிலே கடுவனுடைய செயல்களாகச் சொன்னவை தலைவனுடைய செயல்களைக் குறிப்பிக்கப் பயன்படுகின்றன. பழைய உரை யாசிரியர் இதன் உள்ளுறையைப் பின்வரு மாறு விளக்குகிறர்: கடுவனனது தேனே அறி யாது நுகர்ந்து, பின்பு தனது தொழிலாகிய மரமேறவும் மாட்டாது, வேறு ஓரிடத்துச் செல்லவும் மாட்டாது, தனக்கு அயலாகிய சங் தனத்தின் நிழலிற் பூமேலே உறங்குகின்ருற் போல, நீயும் இக்களவொழுக்கமாகிய இன்பம் நுகர்ந்து, சினது தொழிலாகிய அறநெறியை யும் தப்பி, இக் களவினை நீங்கி வரையவும் மாட்டாது, இக்களவொழுக்கமாகிய இன்பத் திலே மயங்கா கின்ருய் என்றவாறு.'

இந்தப் பாட்டுக்குக் குறிஞ்சி என்று திணே வகுக்கப்பெற்றிருக்கிறது. குறிஞ்சிக்கு உரிய முதற் பொருளில், நின்மலேப் பல்வேறு விலங் கும் என்று நிலம் வந்தது. நெடு வெண் திங் களும் ஊர் கொண்டன்று என்பதல்ை கூதிர்க் காலம் வங்தது.

வாழை, பலா, தேன், கடுவன், மிளகு கொடி, சந்தன மரம், வேங்கை, நாடன்

63