பக்கம்:இன்ப வாழ்வு.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112

இன்ப வாழ்வு


பத்து ஏர் உடையவர்களும் பரபரப்புள்ளவராகவே காணப்படுவார்கள். ஆனால் ஒருவன் மட்டும் ஒரே ஏர் உடையவனாய் உள்ளான். தானும் ஏனையோரைப் போன்று ஈரம் காய்வதற்குள் வயல் முழுவதையும் உழுதாக வேண்டும். தவறின், பின்னர் உழமுடியாத வண்ணம் பதம் கெட்டு விடும். கெடின் விளைவற்றுப் போகும். போகவே உண்ண உணவற்று உயிர் வாழ்க்கை அரிதாய் முடியும். எனவே, அவன் விரைந்து உழவேண்டுவது இன்றியமையாததாகும். ஆனால் அவனுக்கு இருப்பதோ ஒரே ஏர். வேறு ஏர்களைக் கூலிக்கு அமர்த்தலாம் என்பதும் இயலாத காரியம். காரணம் அனைவரும் அவ்வேலையில் ஈடுபட்டுள்ளமையேயாகும். மேலும், வயலின் ஈரம், இருக்க வேண்டிய அளவுக்குக் குறைந்தோ அல்லது மிக்கோ இருக்குமாயினும் மற்றொரு சமயத்தில் உழுது கொள்ளலாம் எனச் சோம்பி இருக் கலாம். இங்கு அப்படியும் இல்லை. உழுதற்கேற்ற பதமுள்ளதாக ஈரம் அமைந்துள்ளது. இதனை ஈரம் பட்ட செவ்வி (செவ்வி - பதம்) என்னும் தொடரால் உணரலாம். மற்றும் ஈரம் பட்ட செவ்வியதாய் இருப் பினும், உழுது விதைத்தால் போதிய விளைச்சல் விளையக் கூடிய இயற்கை வளம் இல்லாத நிலமாயிருப்பினும் போகட்டும் என்று சோர்ந்து விட்டு விடலாம். இது அத்தகையதன்று. போட்டால் பொன் விளையக் கூடிய புகழ்ச்சி மிக்கது. இதனைப் பைம்புனத்து’ என்னும் தொடரால் உணரலாம். ஆதலின் இத்தகைய நிலத்தை உழாமல் வறிதே வைத்திருக்க யாருக்குத்தான் மனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/113&oldid=550682" இலிருந்து மீள்விக்கப்பட்டது