பக்கம்:இன்ப வாழ்வு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

இன்ப வாழ்வு


அவரை அழைப்பாயாக’ என்று தூண்டி விட்டாள். குழந்தைகள், தாய் தந்தையர் வெளியே புறப்பட்டால், இயற்கையாகவே அழுது கொண்டு பின் தொடரும் இயல் புடையவர்கள்; ‘ இப்போதோ தாயும் தூண்டி விட்டாள். தேரிலும் குதிரையின் கழுத்திலும் கட்டியுள்ள மணிகளின் ஒலியும் குழந்தையை “வா வா’ என்று அழைக்கின்றது. எனவே அக்குழந்தை வாளா இருப்பானா? அப்பா! அப்பா! என்று அழைத்து அழுதுகொண்டே வெளியில் வந்தான். வாசற்படியையும் தாண்டினான். தெருவையும் அடைந்தான். தகப்பன் கண்டான் குழந்தையை.

குழந்தையின் வாயோ குளறுகின்றது. கண்கள் கலங்குகின்றன. வாயின் உமிழ்நீரும் கண்ணிரும் கலந்து உடம்பை நனைக்கின்றன. வயிறு குலுங்குகின்றது. கைகள் சோர்ந்து விழுகின்றன. கால்கள் தளர்ந்து மடிந்து ஒடிந்து விடும் போல் தோன்றுகின்றன. சுருங்கக் கூறின், அந்நேரம் அக்குழந்தையைக் கண்டால் கல் நெஞ்சினரும் கரைந்து இரக்கம் கொள்வார்கள். மேலும் இயற்கையி லேயே, பகைவராலும் விரும்பப்படும் அளவு அழகு வாய்ந் தவன் அக்குழந்தை. எனவே, குழந்தையின் இக் கோலத்தைக் கண்டும் எத்தந்தைதான் மேற்செல்லத் துணிவான்? கடந்த மாமுனிவரும் கடப்பரோ மக்கள்மேல் காதல்?’ என்பது பட்டறிவுப் பாடலாயிற்றே! எனவே குழந்தை தன் தந்தையின் மனத்தைக் கொள்ளை கொண்டதில் ஒரு வியப்பும் இல்லையல்லவா?

தகப்பனும் தேரை நிறுத்தும் படியாகப் பாகனுக்குக் கட்டளையிட்டான். பாகன் நிறுத்தினான். உடனே தந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/127&oldid=550697" இலிருந்து மீள்விக்கப்பட்டது