பக்கம்:இன்ப வாழ்வு.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இன்ப வாழ்வு


மனமில்லை. அவள் தன் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத பொருளாகவும் இருக்கின்றாள். எனவே அவளைத் தக்க இடத்தில் வைத்துப் போற்றிக் காக்க முயலுகிறான். அவளுக்கு ஏற்ற இடம் எது? அவளைக் கண்ணாடி நிலைப்பெட்டியில் (அலமாரியில்) வைக்கலாமா? அல்லது இரும்புப்பெட்டியில் வைத்துப் பூட்டலாமா? அப்படியெல்லாம் செய்வதற்கு அவள் என்ன அவ்வளவு மட்டமான பொருளா? பின் எந்த இடம் ஏற்றது. தன் வாழ்நாள் முழுதும் அவளைத் தன்னுடனேயே வைத்துக் கொள்வது எப்படி? சிவன் தன் மனைவியைத் தன் இடப்பக்கத்திலும், திருமால் தன் மனைவியை மார்பிலும், நான்முகன் தன் மனைவியை நாக்கிலும் வைத்துக்கொண்டதாகப் புராணங்கள் புகலுகின்றன. ஆனால், எண்சாண் உடல்பிற்குத் தலையே இன்றியமை யாதது என்பது அவனுக்குத் தெரியும். அத்தலையிலுள்ள உறுப்புக்களுள்ளும் கண்ணே மிக மிக இன்றியமையாதது என்பதும் அடுத்தப்படி அவனுக்கு மிக நன்றாகத்தெரியும். எனவே, தலைவியைத் தன் கண்ணிற்குள் வைத்துக் காக்க விரும்பினான்.

கண் மிகவும் இன்றியமையாத உறுப்பு என்பது எல்லாருக்கும் தெரியுமே! குழந்தையோடு கொஞ்சுபவர்கள் கூட என் கண்ணே! என்கின்றனரே தவிர, என் முக்கே நாக்கே-காதே காலே என்பதில்லை. அதனாலேயே அவன் கண்ணைத் தேர்ந்தெடுத்தான்.

கண்ணினுள்ளும் எங்கே வைப்பது? கண்ணிலுள்ள வெள்ளைப் பகுதியில் வைப்பதா? அல்லது அவ்வெண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/163&oldid=550737" இலிருந்து மீள்விக்கப்பட்டது