பக்கம்:இன்ப வாழ்வு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் சுந்தர சண்முகனார்

169


‘'சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்

பிறப்புப் பிறிதாகுவ தாயின்

மறக்குவன்கொல் என் காதல் எனவே’ (397) என்னும் நற்றிணைப் பாடலிலும்,

‘இம்மை மாறி மறுமை யாயினும்

நீயாகியர் என் கணவனை

யானாகியர் கின் நெஞ்சு நேர்பவளே’ (49) என்னும் குறுந்தொகைப் பாடலிலுங்கூட அமைந்து கிடக்கிறது. மேகூறிய இரு பாடல்களிலும் தலைவி தன் கருத்தை வெளிப்படையாகத் தெரிவித்ததாக அமைந் திருக்கும் முறையை விட, தலைவி தன் கருத்தைக் கண்ணிரால் குறிப்பாக அறிவித்ததாகத் திருக்குறளில் கூறப்பட்டிருக்கும் முறை மிகவும் நயமானது - சுவை யானது! இதனினும் நயமாக - சுவையாக - சிறப்பாக எந்த நாட்டில் எந்த மொழியில் எந்த நூலில் எந்தப் புலவன் பாடியிருக்கிறானோ, தெரியவில்லை!

எனவே, வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியமாகிய

காமத்துப்பால், கண்டவரை நோக்கிக் கண் சிமிட்டும் கயமைக்கு இடம் தருவதன்று; கனிந்த காதல் இன்ப வாழ்வைப் பரிந்துரைப்பது - கலங்காத கற்பு நெறியை வற்புறுத்துவது, என்பது புலனாகுமே! வள்ளுவர் கண்ட இன்ப இலக்கியம் என்றென்ன! தமிழ்மொழியில் உயர்ந்த புலவர்களால் எழுதப்பெற்ற எல்லா இன்ப இலக்கியங்களுமே, திருக்குறளின் வரிசையில் வைத்து மதித்துப் போற்றத் தக்கனவே! எல்லாவற்றிலும் உள்ள அடிப்படைக் கருத்து இன்ப வாழ்வே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்ப_வாழ்வு.pdf/170&oldid=550745" இலிருந்து மீள்விக்கப்பட்டது